தமிழ் வளர்க்கும் தாளாண்மைகள்

நாளிதழ் நடவடிக்கைகள்: சென்ற இதழில் குறித்தபடி அறக்கட்டளைக்கு வந்த நன்கொடைத் தொகை

மொத்தம் உரூ.
2,33,233
சென்ற திங்கள் வந்த தொகை:
திரு க. துரையரசன், வேலாயுதம்பாளையம்.உரூ.
100
திரு பொ. இராமராசு, கோவை.உரூ.
50
ஆக மொத்தம்  
2,33,383

இணையத் திங்களிதழ் 'தமிழ்க்காவல்' என்ற பெயரில் தி.ஆ. உ0ங ஆடவைத் திங்கள் முதல் நாளில் 15-06-2008 வெளியிடப்பட்டது. அதன் இணைய முகவரி : http://www.thamizhkkaaval.net என்பது. வழக்கப்படி நன்கொடை களைத் 'தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை' என்ற பெயருக்குப் பணவிடையாகவோ கேட்புக் காசோலை யாகவோ திரு தி.ப.சாந்தசீலன், பொருளர், 22, உடையார் தெரு, பாக்கமுடையான்பட்டு, புதுச்சேரி - 605 008 என்ற முகவரிக்கு அனுப்புக.

பணிநிறைவு பெற்ற ஆசிரியர் நலவாழ்வுக் குழுவின் சார்பில் முன்னாள் கல்வித்துறை இணை இயக்குநர் திரு. ந. முத்துக்கிருட்டினன் 80ஆம் பிறந்தநாள் விழா: 23-07-2008 அன்று திரு அரங்க. விசயரங்கம் தலைமையில் நடைபெற்றது. அரிமா திரு கி. லூசியன் தேவராசு வரவேற்புரையும், திரு த. முத்தையன், திரு அ. இராமதாசு, திரு இரா. வளவன் ஆகியோர் பாராட்டுரையும், நீதியரசர் தாவீது அன்னுசாமி அவர்கள் நினைவுப் பரிசு வழங்கி வாழ்த்துரையும் ஆற்றினர். திரு ந. முத்துக்கிருட்டினன் அவர்களின் ஏற்புரைக்குப் பின் திரு சு. சேசாசலம் நன்றி கூறினார். கலைமாமணி புலவர் பூங்கொடி பராங்குசம் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.

புதுச்சேரி இலக்கியப்பொழில் இலக்கிய மன்றத்தின் 28ஆம் நிகழ்ச்சி: 25-07-2008 அன்று தொழில் முனைவர் பெ. பராங்குசம் வரவேற்புரையும், "இலக்கியங்களில் காணும் குமுகாயச் சிந்தனைகள்" பற்றித் திரு சிவ. இளங்கோவனும், "இலக்கியங்களில் காணும் மொழிமாண்பு" பற்றிச் செஞ்சொற்சுடர் சீனு. வேணுகோபாலும் உரையாற்றினர். புலவர் பூங்கொடி பராங்குசம் நன்றியுரையுடன், நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.

புதுவைச் செந்தமிழர் இயக்கத்தின் பாவலரேறு பெருஞ்சித்திரனார் நினைவேந்தல் கருத்தரங்கம் : 26-07-2008 அன்று திரு ந.மு. தமிழ்மணி தலைமையில் நடைபெற்றது. திரு செ. முருகன் வரவேற்புரையும், புலவர் செ. இராமலிங்கன், பாவலர் இரா. இளமுருகன், முனைவர் மு. வெற்றிவேல், பாவலர் அமுதவேந்தன் ஆகியோர் கருத்துரையும், தமிழர் கண்ணோட்டம் ஆசிரியர் திரு பெ. மணியரசன் "தமிழக எல்லைக்காப்பும், உரிமை மீட்பும்" எனும் தலைப்பில் சிறப்புரையும் ஆற்றினர். திரு தி. அமிர்தலிங்கம் நன்றி நவின்றார்.