![]() |
தமிழ் வளர்க்கும் தாளாண்மைகள்
நாளிதழ் நடவடிக்கைகள்: ஏற்கெனவே அறக்கட்டளைக்கு வந்த நன்கொடைத் தொகை மொத்தம் உரூ. 2,09,733*
அன்புகூர்ந்து நன்கொடைகளைத் தமிழ்வளர்ச்சி அறக்கட்டளை என்ற பெயருக்குப் பணவிடையாகவோ. கேட்புக்காசோலையாகவோ, திரு தி. ப. சாந்தசீலன், பொருளர், 22, உடையார் தெரு, பாக்கமுடையான்பட்டு, புதுச்சேரி -605008 என்ற முகவரிக்கு அனுப்புக. *15-3-2007 தெளிதமிழில் மொத்தத்தொகை. 1,98,832 என்பதற்குப்பதில் 2,08,832 என்று தவறாக அச்சாகிவிட்டது. இத்தவறு அவ்விதழ்முதல் தொடர்ந்து வந்துள்ளது. இதை அன்பர்கள் அவ்விதழில் கூட்டிப்பார்த்துச் சரிபார்த்துக் கொள்ளலாம். மேலும் மீண்டும் கணக்கைச் சரிபார்த்தில் உரூபா 2/-விட்டுப் போனது தெரியவந்தது. இவையனைத்தும் சேர்ந்த சரியான மொத்தத் தொகையே இது. தவறு நேர்ந்ததற்குத் தமிழன்பர்களின் அன்பான பொறுத்தாற்றலை வேண்டுகிறோம். மலேசியாவில் திருக்குறள் ஆங்கில அறிமுக நிகழ்ச்சி 4-8-2007 அன்று கோலாலும்பூரில் சிறப்பாக நடந்த இந்நிகழ்ச்சியில், அமைச்சர் கள் டத்தோ தன் கீ குவொங், டத்தோ விசயரத்தினம், திருவாளர்கள் மு. மணிவெள்ளையன், இரா. திருமாவளவன் முதலியோர் உரையாற்றினர். திருக்குறளின் மலாய், சீன மொழிபெயர்ப்புகளைக் கல்வி நிறுவனங்களில் பாடமாக வைக்கவேண்டும் என்பது முதலிய தீர்மனங்கள் நிறைவேற்றப் பெற்றன. திருக்குறளைப் பற்றிய அரிய செய்திகளடங்கிய, தமிழ், மலாய், சீன மொழிகளில் திரு மு. மணி வெள்ளையன் ஆக்கிய கையேடு ஒன்று வெளியிடப்பட்டது என்ற செய்தியைத் திரு இராம. மாணிக்கம் தெரிவிக்கிறார். உலகத்தமிழர் பேரமைப்பின் மாநாடு வரும் 7-10-2007அன்று திருப்பூர் நகரில் உலகத்தமிழர் பேரமைப்பின் 5ஆம் ஆண்டு நிறைவு மாநாடு நடைபெற உள்ளது என்பதைத் தலைவர் திரு பழ. நெடுமாறன் அவர்கள் அறிவிக்கிறார்கள். திரும்பினார் திருவள்ளுவர் புதுச்சேரி இலக்கியப்பொழில் இலக்கிய மன்றம் சார்பில், முனைவர் சிவ. இளங்கோவின் கானல்வரிக் கலைக்குழு வின் திரும்பினார் திருவள்ளுவர் என்ற நாடகம் நடைபெற்றது. முனைவர் கனகராசு இயக்க, சீனி. வேணுகோபால், நட. இராமமூர்த்தி, முனைவர் உரு. அசொகன், புதுவைப் பார்த்தசாரதி, முனைவர் சிவ. இளங்கோ, கோ. செழியன் ஆகியோர் நடித்தனர். | |||||||||||||||