பிழை |
சரி |
| பெட்டிப்பெட்டியாக |
பெட்டிபெட்டியாக |
| தாய்மொழிக்கு சிறப்பு சேர்த்தல் |
தாய்மொழிக்குச் சிறப்புச் சேர்த்தல் |
| 46 விழுக்காடு பெண்கள் |
46 விழுக்காட்டுப் பெண்கள் |
| நம்பிக்கைத் தெரிவித்தார் |
நம்பிக்கை தெரிவித்தார் |
| குத்து சண்டை பிரிவு |
குத்துச்சண்டைப் பிரிவு |
| செய்யும்படிக்கோருகிறோம் |
செய்யும்படி கோருகிறோம் |
| கலங்கமில்லாதவர் |
களங்கமில்லாதவர் |
| சித்தாள் |
சிற்றாள் |
| குறைக் கூறினார் |
குறை கூறினார் |
| தாய்ப்பாடினாள் |
தாய்பாடினாள் |
| உலக தாய்ப்பால் நாள் |
உலகத் தாய்ப்பால் நாள் |
| கடற்கரை காவல் நிலையம் |
கடற்கரைக் காவல் நிலையம் |
| முனுமுனுத்தல் |
முணுமுணுத்தல் |
| முழு படமும் |
முழுப் படமும் |
| ஒருங்கிணைப்பு காணப்படுகிறது |
ஒருங்கிணைப்புக் காணப்படுகிறது |
| எல்லா பேருந்துகளும் |
எல்லாப் பேருந்துகளும் |
| வெளியீடு எண் |
வெளியீட்டு எண் |
| நாற்பத்தி நான்கு |
நாற்பத்து நான்கு |
| ஆண்டாண்டு காலமாக |
ஆண்டாண்டுக் காலமாக |
| வரலாற்றுத் தவறை |
வரலாற்றுத் தவற்றை |
| புகைப்பட கண்காட்சி |
புகைப்படக் கண்காட்சி |
| நூறடி சாலை |
நூறடிச் சாலை |
| பகடை காய்கள் | பகடைக் காய்கள் |
| பலவாராய் | பலவாறாய் |
| எமது வெளியீடுகள் | எம் வெளியீடுகள் |
| குறைகளை மனதில் கொண்டு | குறைகளை மனத்தில் கொண்டு |
| நேரடியாக கல்வி பயில | நேரடியாகக் கல்வி பயில |
| தொலைநிலை கல்வி பயில | தொலைநிலைக் கல்வி பயில |
| பலப் பாடல்களில் | பல பாடல்களில் |
| நாடு மீது காட்டும் பரிவு | நாட்டின்மீது காட்டும் பரிவு |