
|
பாவலர் பரிசுதிட்டம்
பாவலர் பரிசுதிட்டம் - 43இல் பரிசு பெற்றவர்
பாவலர் பரிசு திட்டம்-42
உரூபா 500 பரிசு பெறும் பாடல் : 1.தாயினும் மேலாம் தாய்மொழி மறந்தே தருக்குவர் வேற்றவர் மொழியில் வெளியீட்டுக்குத் தேர்வுபெற்ற பாடல்கள் (தரவரிசைப்படி): 2.தேய்ந்திடும் நிலையி லிருந்திடும் மொழிதான்
சீர்பெறும் வகையினைத் தேடார் 3.ஆயிரம் வழியில் அழிபொருள் தேடி
அருங்கலை உணர்வினை இழந்து 4.தாயினும் உயர்வாய்த் தமிழினை எண்ணார் தமிங்கிலம் போற்றிவாழ்ந் திடுவார் 5.ஆயிர மாக அடுக்கிய செல்வர் அடுத்தவர்க் குதவிட நினையார் 6.தாயினங் காவாத் தறிதலை யாகத் தமிழ்நில அரசினர் உள்ளார்! 7.தாயினு மேலாந் தண்டமிழ் மறந்தே
தமிழராய்ப் பேர்சொலித் திரிவார் 8.மாயிரு ஞால மொழிகளுக் குள்ளே
மாண்புள நந்தமிழ் மொழியை 9.ஞாயிறு திங்கள் எத்திசை எழினும்
நமக்கென வென்றுவாழ்ந் திடுவார் 10.சேயினைக் குப்பைத் தொட்டியி லெறிந்து
திரிபவர் இங்குவாழ் கின்றார் முன்னரே பரிசு பெற்றறோரின் பாடல்கள் : 1.ஓய்வுறார்; என்றும் தந்நலம் காத்தல்
ஒன்றுதான் தொழிலெனக் கொள்வார்; 2.காயெனக் கருதார்; கனியெனச் சுவையார்
கையினில் கிடைத்தன வெல்லாம் 3.காயினைக் கொண்டே கனிதனை விடுத்துக்
களிப்புடன் உண்பதைப் போலே 4.ஆயிரம் முறைகள் பேரறி வாளர்
அருந்தமிழ்ச் சிறப்பினை விளக்கித் 5.நாயினும் கீழா மற்றவர் காலை
நக்கியே வாழ்பவர் நடுவண் 6.தாயினும் மேலாம் தண்டமிழ் நையத்
தமிழினம் எங்கிலும் தாழ கருத்தூன்றுக
1. கொடுக்கப்பட்டது 'ஒருவகை மண்டிலப்பாவின் ஓரடி' என்று குறித்திருந்தேன். மண்டிலப்பா (விருத்தம்) என்பதை ஊன்றி நோக்காமல் சிலர் ஆசிரியப்பா, கலித்துறை முதலியன எழுதியிருந்தனர். சிலர் மண்டிலங்கள் படைத்திருந்தாலும் அவை அறுசீர், எண்சீர் மண்டிலங்களாக இருந்தன. ஞாயிறு திங்க யளத்திசை எழினு நமக்கென வென்றுவாழ்ந் திடுவார் என்று சீர்பிரித்தெழுதினால் கொடுக்கப்பட்டது முறையான ஓர் எழு சீர்மண்டில அடியாக அமையும். சிலர் இதனை வேறு வகை மண்டில அடிகளாகப் பிரித்திருந்தார்கள் எனினும் அத்தகைய அடியமைப்புடைய மண்டிலங்கள் இல்லை. 2. சிலர் எழுசீர் மண்டிலம் எழுதியிருப்பினும் சீர்கள் இலக்கணப்படி அமைய வில்லை. 3. இவ்வகைப் பாவில் 5ஆம் சீராகத் 'துவள்வோர்' என்ற மாச்சீர் வாராது. அங்கே விளச்சீர் வரவேண்டும். 4. ஞாயிறு என்பதற்குக் கையிலே என்பது எதுகையாகாது. சீர் முதலில் வரும் 'கை' நெடிலாகக் கொள்ளப்பட்டாலும், அதைக் 'கய்' என்று குறிலொற்றாகக் கொள்வதே முறை. கைவேல் - மெய்வேல் (குறள் 774) என்பது காண்க. 5. பா-பி, மா-நி மோனையாகா. 6. போயயாரு உதவி என்று 'ஒரு' முன் உயிர்வர எழுதுவது பிழை. போயோர் உதவி என்று எழுதினாலும் இவ்விருசீரும் புணர்ந்தால் 'போயோ ருதவி' எனச்சீர் சிதையும். 7. பேரம் (வணிகம்) சிரம் (தலை), சிந்தை (மனம்) பதவி (பணிநிலை) ஆசை (விருப்பம்) போதை (மயக்கம்) புவி (உலகு) ஆகிய பிறமொழிச் சொற்களைக் களைந்திருக்கலாம். பாவலர் பரிசு திட்டம் - 45
'மொழிப் பற்றிலா திருக்குமின நெடு நாணிலைத் திருத்தன் முடிந்திடாது' என்பது ஒருவகை நாலடிப்பாவின் ஓரடி. இதன் சொற்கள் அனைத்தும் புணர்த்தெழுதப்பட்டுள்ளன. இதனைச் சீர்பிரித்து இன்ன வகைப் பாவென்றறிந்து, அவ்வகைப் பாவில் இதனை முதல், இடை, கடை ஆகிய விரும்பிய இடத்தில் அமைத்து ஒரு பாடல் இயற்றி வரும் மடங்கல் உ0 (5-09-2008) க்குள் விடுக்க. |