
|
தமிழ் வளர்க்கும் தாளாண்மைகள்
நாளிதழ் நடவடிக்கைகள்: ஏற்கெனவே அறக்கட்டளைக்கு வந்த நன்கொடைத் தொகை மொத்தம்
அன்புகூர்ந்து நன்கொடைகளைத் தமிழ்வளர்ச்சி அறக்கட்டளை என்ற பெயருக்குப் பணவிடையாகவோ. கேட்புக்காசோலையாகவோ, திரு தி. ப. சாந்தசீலன், பொருளர், 22, உடையார் தெரு, பாக்கமுடையான்பட்டு, புதுச்சேரி -605008 என்ற முகவரிக்கு அனுப்புக. புதுச்சேரியில் தமிழ் வழிக்கல்வி கோரி ஆர்ப்பாட்டம்: தமிழ்வழிக் கல்விப் போராட்டக்குழுவின் சார்பில் புதுச்சேரியில் 2.10.07 அன்று திரு. ந.மு. தமிழ்மணி தலைமையில், தமிழைக் கட்டாயப்பாடமாக்கிச் சட்டம் செய்ய வேண்டும் என்றும், தமிழ் வழிக்கல்வி வேண்டியும் தமிழமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப் பட்டது. மாவீரர் பழ. நெடுமாறன் சிறப்புரையாற்றினார். ![]() அப்போது, புதுவைத் தமிழ்ப் புரவலர் திரு. தி.ப. சாந்தசீலன் அவர்கள் விரும்பியளித்த பொற்கணையாழியை அவர் சார்பில், உலகத் தமிழர் தலைவராகிய அவர்தம் கைகளுக்கு வலிமை என்றும் சேர்ப்போம் என்பதை உணர்த்தும் வகையில், முனைவர் இரா. திருமுருகன் மாவீரன் விரலில் மகிழ்ந்து செறித்தார். நூல் முன்பதிவுத் திட்டம்: பெரியார் கண்ட பேரறிஞர் வே. ஆனைமுத்து என்ற பெயரில் 21.6.2008 இல் 500 பக்க அளவில் 300உரூபாய் விலையில் வெளிவரப்போகும் நூலுக்கு உரூ. 1000/- அனுப்பி முன்பதிவு செய்து கொள்வோர்க்கு 5 நூற்படிகள் அனுப்பப்படும். தொகையை, பாவேந்தர் பதிப்பகம், திருமழபாடி, அரியலூர் மாவட்டம் 621851 என்ற முகவரிக்கு வரைவோலையாக அனுப்பவேண்டும். தோழர் ஆனைமுத்துத் தொடர்பாக ஏ-4 அளவில் 5 பக்கம் 1500 சொற்களுக்கு மிகாத கட்டுரைகள் 31.12.07க்குள். சங்கமித்திரா, 1/429, தென்பெரு நெடுஞ்சாலை, வண்டலூர் வாயில் சென்னை-48 என்ற முகவரிக்கு அனுப்பலாம். தெளிதமிழ்ப் பாவலர்க்குப் பரிசும் பாராட்டும்: மரபில் மணக்கும் மலர்கள் என்னும் மரபு பாடல் நூலின் ஆசிரியர் புலவர் த. ஆறுமுகம், 11.7.07 அன்று நெய்வேலியில் நடைபெற்ற நூற்காட்சியில் உரூபாய்.5000/- பொற்கிழியும் பொன்னாடையும் பாராட்டிதழும் வழங்கிப் பாராட்டுப் பெற்றார். தெளிதமிழ் வளர்த்த பாத்திறன் காரணமாக இந்தப் பரிசு கிடைத்தமையால் நன்றிக்கடனாக அதன் வளர்ச்சிக்கு உரூ. 200/- நன்கொடை வழங்குகிறார். தமிழ் இலக்கிய மன்ற விழா: சேதராப்பட்டுக் கலை அறிவியற் கல்லூரியில் 21.9.2007 அன்று நடந்த இவ்விழாவில் முனைவர் இரா. திருமுருகன் இசைத்தமிழ் என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். விழாவில் தெளிதமிழ் வளர்ச்சிக்காக உரூ. 500/- நன்கொடையளிக்கப்பட்டது. செஞ்சித் திருக்குறள் பேரவையின் வெள்ளிவிழா மாநாடும் கருத்தரங்கும்: வரும் 16,17,18-1-2008 நாட்களில் செஞ்சிக் காமாட்சியம்மன் திருமண மண்டபத்தில் நடைபெற இருக்கும் இவ்விழாவின் மலர்க்குத் திருக்குறள் தொடர்பாக ஏ-4 தாளில் 5 பக்கத்தில் ஆய்வுக் கட்டுரையுடன் உரூ. 500 க்குச் செஞ்சித் திருக்குறள்பேரவை என்ற பெயரில் வரை வோலை எடுத்து 31.10.07க்குள் பின்வரும் முகவரிக்கு விடுக்குமாறு வேண்டுகிறார்கள். மலர்ப்பொறுப்பாளர் முனைவர் நயம்பு. அறிவுடைநம்பி, சந்தை மேடு, செஞ்சி - 604 202. கைப்பேசி. 9443500162. திருமழபாடியில் திருவள்ளுவர் சிலை: திருமழபாடித் தமிழ்ச் சங்கம் சிலையமைப்புக்காக 8 இலக்கம் உரூபா எதிர்பார்த்துத் திட்டமிட்டிருக்கிறது. இதன் வெற்றிக்கு உதவுக. நன்கொடைகளைத் திருவள்ளுவர் சிலையமைப்புக் குழு, 'சீரகம்' நடுத்தெரு. திருமழபாடி- 621 851 என்ற முகவரிக்கு அனுப்புக. திருக்குறள் அறக்கட்டளை: திருப்பூர்த் தமிழறிஞர் திரு க. இரா. முத்துச்சாமி அவர்கள் தாய்மொழிக்கல்வி, பகுத்தறிவு, இயற்கை வாழ்வு, பொதுநலம் ஆகியவற்றைப் போற்றிவாழும் நோக்குடன் நிறுவியுள்ள திருக்குறள் அறக்கட்டளையுடன் தொடர்பு கொண்டு மேலும் விளக்கங்களைப் பெறலாம். இயற்கை வாழ்வகம், 360, சுந்தரம் சாலை, திருப்பூர் - 641 601. கைப்பேசி 98940 83868. புலவர் பூங்கொடி பராங்குசத்திற்குச் செந்தமிழ்ச் சுடர் சிறப்புப் பட்டம்: புதுவை ஆசிரியர் நலவாழ்வுக்குழுவின் சார்பில் 9.10.07 அன்று புலவர் பூங்கொடி பராங்குசத்தின் தமிழ்த் தொண்டுகளைப் பாராட்டி முனைவர் இரா. திருமுருகன் அவர்களால் செந்தமிழ்ச் சுடர் என்ற சிறப்புப் பட்டம் வழங்கப்பட்டது. திரு. லூய்சியேன் தேவராசு, திருமதி தேவகி ஆனந்து, திரு விசயன், புலவர் கி.த. பச்சையப்பன் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். தென்னகத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கத் தீர்மானங்கள்: 9.9.07 இல் பொதுக்குழுக் கூட்டத்தில், பள்ளிகல்லூரிகளில் பாடல், கட்டுரைப் போட்டிகள் நடத்தித் தமிழ்வளர்த்தல், தமிழை முதன்மைக் கல்விக் குரிய மொழியாக்க வேண்டுதல், எழுத்தாளர்களுக்கு இலவசப் பேருந்துப் பயண அட்டை வழங்கல், 2004, 2005, 2006ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பெற்ற நூல்களை அரசு நூலகத்துறை ஏற்றமைக்கு நன்றி முதலிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழர் இயக்கத்தின் அஞ்சல்வழி அரசியல்: இலக்கணப் புலவர் த.ச. தமிழன் நடத்தும் இக்கல்வி பற்றிய விரிவான விளக்கங்களைப் பின்வரும் முகவரியிற் பெறுக. த.ச. தமிழன், கரசங்கால் - 601 301. |
||||||||||||