பிழை |
சரி |
| அமைச்சர் வீடு முன் |
அமைச்சர் வீட்டு முன் |
| சான்றோர்ப் பேரவை |
சான்றோர் பேரவை |
| தமிழ்நாடு சான்றோர் |
தமிழ்நாட்டுச் சான்றோர் |
| சிலம்பாட்ட போட்டி |
சிலம்பாட்டப் போட்டி |
| ஆர்க்காடு தொகுதி |
ஆர்க்காட்டுத் தொகுதி |
| போராடி தீயை அவித்தனர் |
போராடித் தீயை அவித்தனர் |
| இங்குதான் இருக்கிறோம் |
இங்குத்தான் இருக்கிறோம் |
| அழகுகலைப் பயிற்சி |
அழகுக்கலைப் பயிற்சி |
| குறுதொழில் |
குறுந்தொழில் |
| தரகட்டுப்பாடுகழகம் |
தரக்கட்டுப்பாட்டுக் கழகம் |
| மேற்ப்பார்வையில் |
மேற்பார்வையில் |
| தங்களது கோரிக்களை |
தங்கள் கோரிக்கைளை |
| பயிற்சிகள் அளிக்கப்படுகிறது |
பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன |
| ஒரு இடம் |
ஓர் இடம் |
| மனதிற்கு |
மனத்திற்கு |
| ஆண்டுகள் கழிந்து விட்டது |
ஆண்டுகள் கழிந்து விட்டன |
| கோயம்பேடு வணிகவளாகம் |
கோயம்பேட்டு வணிக வளாகம் |
| அறமன்ற தீர்ப்பு |
அறமன்றத் தீர்ப்பு |
| வேலூர் கோட்டை |
வேலூர்க் கோட்டை |
| இலங்கை கடற்படையினர் |
இலங்கைக் கடற்படையினர் |
| எல்லா உறவும் முறிந்து விட்டது |
எல்லா உறவும் முறிந்து விட்டன |
| தங்ககாசு |
தங்கக்காசு |
| 84.4 விழுக்காடு தேர்ச்சி | 84.4 விழுக்காட்டுத் தேர்ச்சி |
| இயக்குனர்கள் | இயக்குநர்கள் |
| செய்தி தொடர்பாளர் | செய்தித் தொடர்பாளர் |
| பதிமூன்றாமாண்டு | பதின்மூன்றாமாண்டு |
| மோர்பந்தல் | மோர்ப்பந்தல் |
| பலவாராய் | பலவாறாய் |
| இசைகச்சேரி | இசைக்கச்சேரி |
| அவை குறிப்பிடுகின்றது | அவை குறிப்பிடுகின்றன |