உலகின் முதல் மொழி தமிழ் ; முதல் மகன் தமிழன்.

முனைவர் மு. தெய்வநாயகம்.



1. இந்திய மொழிகளில் செம்மொழி என இந்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள மொழிகள் இரண்டு, அவை 1. தமிழ் 2. சமற்கிருதம்.

2. சமற்கிருதம் கி.பி. 2ஆம் நூற்றாண்டிற்கு முன் இருந்ததற்கான கல்வெட்டுச் சான்றுகளோ, நாணயவியல் சான்றுகளோ இதுவரை கிடைக்கவில்லை. முதல் சமற்கிருதக் கல்வெட்டுக் காணப்படுவது கி.பி. 150 இல் தான்.

3. தமிழ் மொழியிலுள்ள கல்வெட்டுகள், கி.மு. 3ஆம் நூற்றாண்டிலிருந்தே கிடைக்கின்றன.

4. ஆதிச்சநல்லூர்ப் புதைபொருள் ஆராய்ச்சியில் கி.மு. எட்டாம் நூற்றாண்டுத் தாழியில் இருக்கும் தமிழ் எழுத்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

5. மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள செம்பியன் கண்டியூரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய கற்காலக் கோடரியில், சிந்துவெளித் தமிழ்எழுத்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது கி.மு. 2500க்கு முற்பட்டது.

6. சிந்துவெளி நாகரிகம் தமிழர்களுடையது என நிலைநாட்டப்பட்டுள்ளது. தமிழர் என்னும் தமிழ்ப் பெயர் சமற்கிருதத்தில் திராவிடர் என்று குறிக்கப்படுகிறது.

7. சிந்துவெளிக்கு முற்பட்ட தமிழர்களுடைய நாகரிகத்தைப் பற்றிக் கடல்கோளால் அழிந்த குமரிக் கண்டம் கூறிக் கொண்டிருக்கிறது. முதல் மனிதன் தோன்றிய இடம் குமரிக் கண்டம் என்று நம்பப்படுகிறது.

8. முதல் மனிதனுடைய தோற்றத்தைப் பற்றிக் கூறும் பைபிளின் பழைய ஏற்பாடு எபிரேய மொழியில் எழுதப்பட்டிருக்கிறது.

9. எபிரேயத்தின் தாய் மொழி தமிழே என்றும் தலைப்பில் ம.சோ.விக்டர் நூல் எழுதியுள்ளார்.