மாணாக்கர் பக்கம்

மாணாக்கர் பரிசு திட்டம்-133க்கான விடை :

1. நாடும் நகரமும் நன்கு அவள் நாடினாள்
நாடு நகரமு நன்கவ ணாடினாள்
2. பொருள் நயமும் சொல் நயமும் நல்ல
பொருணயமுஞ் சொன்னயமு நல்ல
3. மனத்துள் தித்திக்கும் தேன் நிகர்ப்பான்
மனத்துட் டித்திக்குந் தேனிகர்ப்பான்
4. புல் நுனிமேல் நீர் போல் நிலையாது இளமை
புன்னுனிமே னீர்போ னிலையா திளமை
5. கண்ணில் தெரியவரும் அண்ணல் திருமுகம்
கண்ணிற் றெரியவரு மண்ண றிருமுகம்

சரியான விடையெழுதியோர் :

புலவர் வி. திருவேங்கடம், புதுவை - 11.

மாணாக்கர் பரிசு திட்டம்-134

திருக்குறளில் ஒற்றெழுத்து (புள்ளி உள்ள மெய்யெழுத்தும் ஆய்தவெழுத்தும்) இல்லாத குறட்பா உண்டா? உண்டாயின் எடுத்துக்காட்டுக.

(பிரித்தெழுதிய நிலையில் புள்ளி உள்ளனவாகத் தோன்றும் சொற்கள் புணர்த்தெழுதிய நிலையில் புள்ளியில்லாமற்போகலாம்). விடையை வரும் விடை உ (05.06.2008) க்குள் அனுப்புக.