நோக்கம் :
இயற்றமிழ், இசைத்தமிழ்ப்பாதுகாப்பும் வளர்ச்சியும்.
வினைப்பாடுகள் :
1. கெடல் எங்கே தமிழின் நலன் அங்கெல்லாம் தலையிட்டுக் கிளர்ச்சி செய்தல்
2. தமிழை ஆட்சி மொழியாகவும், கல்விமொழியாகவும் வளர்த்தல்
வரலாறு :
புதுவைத் தமிழன்பர்கள் தமிழ்ப்பணி அறக்கட்டளையின் சார்பில் 14.4.1993 இல் 'நல்லதமிழ்' என்ற பெயரில்,
முனைவர் இரா. திருமுருகனாரைச் சிறப்பாசிரியராகவும்,
புலவர் மு. இறைவிழியனாரை ஆசிரியராகவும்
கொண்ட திங்களிதழாகத் தொடங்கப்பட்டது.
முதலிதழின் பக்கம்: 16, விலை : 1 உருபா. 14.4.1994 முதல் அரசு ஏற்பின்படித் 'தெளி தமிழ்' என்ற பெயர் மாற்றத்துடன் வெளிவந்துகொண்டிருக்கிறது.
 | ஆசிரியர் :
முனைவர் இரா. திருமுருகன், |
 | துணையாசிரியர் :
பேராசிரியர் ம. இலெ. தங்கப்பா, |
 | உதவி ஆசிரியர் :
பைந்தமிழ்ப் பாவலர் இரா. இளமுருகன். |