கணவன்:"அங்கிட்டுப் பாரேண்டி வெங்கிட் டுத்தான்
ஆடிண்டு வாராண்டி தீர்த்தம் போட்டு!
எங்கிட்டுப் போய்இந்தக் கர்ம மெல்லாம்
இவன்கத்து வந்தானோ தெரிய லையே
திங்கட்டும் பரவால்லே எவளோண் ணாலும்,
தீர்த்தமில்லே ஆடுதிந்தத் திருட்டு நாயி!
பங்கமிந்தப் படுபாவிப் பயலா லேதான்
பரதேசம் போகத்தான் போறேன் பாரு"
மனைவி:"இவனைஎதுக் கிப்போநீர் வைய ரேளாம்?
எல்லோரும் யோக்கியமா இருக்கா ளாக்கும்.
சிவனேன்னு இருந்திருந்தா நீங்கன் னிக்கு,
செய்வானா எம்புள்ள தப்பின் னைக்கு?"
கணவன்:"அவலாக என்னைநீ வறுத்தெ டுத்தே
அன்னாடம் இடிக்கறது போதும் நேக்கு
தவறிப்போய் என்னிக்கோ செஞ்ச துக்குத்
தலைகுனிய வைக்கிறியே நீஇன் னைக்கு"
மனைவி:"ஒழுக்கத்தை ஊருக்குச் சொல்ற வாள்க்கு
யோக்கிதை துளியூண்டும் இருக்க வேணாம்?
அழுக்கிருக்கு முதுகிலேன்னு தெரிஞ்சி ருந்தும்
அடுத்தாளுக் குபதேசம் செய்ய லாமோ?
அழகாகப் பூணூலை மாட்டிண் டேள்னா
அதுபெரிய ஒழுக்கம்னு நெனைக்கி றேளா?
பழுதான மண்டையிலே குடுமி வெச்சிப்
பஞ்சகச்சம் கட்டிண்டா போது மாக்கும்!
கழுத்துமக்கு நீட்டியநாள் தொட்டின் னைக்கும்
கண்டசொகம் எதுனாச்சம் உண்டா நேக்கு?
உழைச்சிவந்தே ஒருகாசும் போட்ட துண்டா?
உண்பதைத்தான் ஏதுன்னு கேட்ட துண்டா?
அழிச்சாட்டம் பண்ணாம இனிமே லாச்சும்
ஆம்பளையா லட்சணமா நடந்துக் கோங்கோ
முழிச்சுண்டு நிக்காதேள்õ எலைபோட் டாச்சு,
முழுங்கிட்டுப் போறேளா உள்ளே வந்து?"