
|
நூல் நிறை
மலர்விழி (பாவியம்) ஆசிரியர் : பாவலர் கருமலைத் தமிழாழன், வெளியீடு : வசந்தா பதிப்பகம், 2/16-6, ஆர்.கே.இல்லம், வசந்த நகர், ஓசூர் - 635 109. பக்கங்கள் : 159+1. விலை : உரூபா 60.00 திராவிட இயக்கக் கேட்பாடுகளில் தோய்ந்தவர் என்று தமிழ்நாட்டு முதல்வர் கலைஞர் அவர்களால் பாராட்டப் பெற்றவர் இந்நுலாசிரியர். இன்னும் சாதிக்கொடுமைகள் நீடிப்பதைக் கண்டு மனம் நைந்து, "சேரியில் பூத்த செந்தாமரை" யாக மலர்விழி என்ற பாவியத் தலைவியை உருவாக்கியதுடன் அவளுக்கு உறுதுணை யாகப் பணியாற்றிச் சாதிக் கொடுமையைக்களைய முற்படும் கொள்கைக் குன்றனாக இளங்கோவன் என்னும் பாவியத் தலைவனையும் உருவாக்கியுள்ளார் நூலாசிரியர். சாதியடிமையை எதிர்த்துப் போராடியவர்களை இறுதிவரை வாழவிடாமல் சிறப்புக்குள்ளாக்குவது, இன்னும் இத்தகைய முடிவுகளைக் கதை ஆசிரியர்கள் கைவிடாமையையே காட்டுகிறது. 'தலித் இலக்கிய அரங்கு' மிகவும் வளர்ந்துவிட்ட இந்தக் காலக்கட்டத்தில் இப்பாவியத்தின் முடிவு மட்டுமல்லாமல், "ஆடைக்கு விலக்களிக்கும் ஆர்வமோடு" (ப.27) தொடரும் அய்ந்தாம் இயல் வண்ணனைகளும், "தாழ்குலத்தில் பிறந்தாலும்" (ப.49) என்பது போன்ற சாதியயாழிப்புக்கு முரணான கருத்தியல்களும் 36 முதல் 44 ஆம் இயல்வரை சொல்லப்பெறும் வீறார்ந்த உணர்வுகளைக் கொண்ட பாவியத்தின் முகத்தில் விழுந்துவிட்ட கரும்புள்ளிகளாக உள்ளன. |