
|
மனம் திறந்த மடல்கள்
செங்கைப்பொதுவன், சென்னை.
தள்ளாடும் மந்திகட்குக் கள்ளை வார்த்துத் என்னும் இரா. செம்பியன் பாடல் அடிகள் மிகச்சிறப்பானவை. 40 விழுக்காட்டு மொழிகள் நடப்பு நூற்றாண்டில் மறையும்! கணக்கீட்டில் தவறு இருக்கு மேனும் கருத்தில் உண்மையும் தெளிவும் இருக்கின்றன. உண்மையை ஒளிக்காமல் எடுத்துக்காட்டிக் காலத்தில் செய்ய வேண்டிய நம் கடமைகளை விளக்கிக்காட்டும் சென்ற இதழின் சிறந்த ஆசிரியவுரை பாராட்டுக்குரியது. தமிழநெஞ்சன், கள்ளக்குறிச்சி.
கருவறையிற் றேவாரங் கூடா தென்னுங் புலவர் ந. ஞானசேகரன், திருலோக்கி.
உழவுத்தொழிலுக்கும் ஊக்கமூட்டி, ஆக்கம் கொடுக்கும் நன்முயற்சியாக ஏரினும் நன்றால், எனும் சிறுகதை, பல நெஞ்சம் தொடும் செய்திகளைப் பதமாய் எடுத்துவைக்கிறது. கதையாசிரியர் யாப்பிலக்கணத்தில் வரும் தேமா, புளிமா, கூவிளம், கருவிளம் எனும் இனிப்புமா, புளிப்புமா, வில்வம், விளாம் என விளக்கி மரவளர்ப்பிலே மறத்தமிழைப் பின்னியிருப்பது நெஞ்சம் பிணித்தது. வள்ளுவனின் தெள்ளுதமிழ்ச் சொற்றலைப்பிட்டே உழவையும் பேணும் பொறிஞர் அகன் அவர்களுக்கு நன்றி. வி. தமிழ்ப்பித்தன், நீடாமங்கலம்.
"ஆணிகட்டின தோல் செருப்பால் அடித்தது போல ஒரு தீர்ப்பு!" என்பதில் அவர்கள் மேல் (அவர்) சினமடைவதை விடத் தமிழ்உணர்வாளர்கள் தாம். அடித்துக்கொள்ள வேண்டும். அண்ணாவுக்குப் பிறகு வந்த அமைச்சரவையும், தமிழ்க் கல்வியையும், திருமணப்பதிவுச் சட்டமாகக் கொண்டு வராவிட்டால் இன்றும் வந்திரா. தமிழ் இதழ்களும், தமிழ்ப்பற்றாளர்களும் அய்ம்பது ஆண்டாகத்தான் தமிழன் புத்தாண்டு 'தை' என்று பேசியும் எழுதியும் வருகிறார்கள். இது இப்போது சட்டமாக வந்தாலும் அது நடைமுறைப்படுத்தப்படுமா? என்று போகப்போகத் தான் தெரியும். பேராயக் கட்சி கொண்டு வந்த தமிழ்க்கல்வியே தூங்கும் போது... தாய்மொழிக் கல்விக்குத் தடையில்லை என்று உயர்முறை மன்றமும் சொன்ன பிறகும் தமிழரசுக்கு உறைக்காமல் இப்போது தான் சொல்லி இருக்கிறது. சொன்னதுடன் போகாமல் நடைமுறைக்கு வர வேண்டும். ஆறு. தமிழ்நிதிவேந்தன், கதிர்காமம்.
தில்லி எனுங்கொடிய...ஈந்தாரே என்ற முகப்புப் பாடல்வரிகள் மறக்கவொண்ணாதவை. என்னதான் எழுச்சியூட்டினாலும் தமிழன் ஆங்கிலக் கூவம் ஆற்றில் எருமையாகத்தான் வீழ்ந்து கிடக்கின்றான். தன்மானமிழந்த தமிழக அரசும் சிங்களக்காடையர்க்கே பேருதவி நல்கி விலைபோகிறது. கவரிமானாக வாழ்ந்திருந்த தமிழர் திருக் கூட்டம் காலப்போக்கில் அயல்நாட்டவரின் தாள்பிடித்துக் கிடப்பதும் விதியின் கொடுமைதான்! மேய்ப்பரில்லாத ஆடுகளாத் தமிழர் அலமருகின்றனர். தொலைக்காட்சிக் கூத்துக்களை நாம் விரைந்து புறந்தள்ளி மயக்கம் விடுபட்டு எண்ணக் கடமைப்பட்டுள்ளோம்! ச.மு. விமலானந்தன், திருப்பத்தூர்.
விமலானந்தன் ஐயர், ஞானசேகரன் ஐயர் - இத்தொடர்களில் ஐயர் என்ற சொல் இடம் பெற வேண்டியதில்லை. பெயர்களுக்கு முன் 'திரு' இடம் பெறலாம். |