
|
மாணாக்கர் பக்கம்
சென்ற இதழ் மாணாக்கர் பரிசு திட்டம் - 131 இன் விடைகள் :
முழுவதும் சரியான விடையளித்தோர் : *மோ. மெய்ம்மொழி கரிக்கலாம்பாக்கம், *இக்குறியிட்ட முதலிருவரும் பரிசு பெறுகின்றனர். 720ஆம் குறளில் 'கணத்தர்' என்பது கணவர் என்று அச்சானதற்கு வருந்துகிறோம். குறிப்பு : தெவ்+ஓர் என்று பிரித்தெழுதவேண்டியவற்றைச் சிலர் தெவ்வோர் என்றே பிரிக்காமல் எழுதி யிருந்தனர். ஞாலம் என்று எழுத வேண்டியதைச் சிலர் "ஞால' என்றே எழுதியிருந்தனர். 720 ஆம் குறளில் தம் என்று பிரிக்க வேண்டியசொல்லைச் சிலர் அம் என்று பிரித்திருந்தனர். நடுங்கு+அஞர் என்று பிரிக்க வேண்டியதைச் சிலர் நடுங்க + அஞர் என்று பிரித்திருந்தனர். மாணாக்கர் பரிசு திட்டம்-132
விடுகதை
"ஐயா!என்ற ழைக்கும் சொல்தான் அருவருப் பானதென்று அவன் குறிப்பிடும் அச் சொல் எது? அதைத் தொல்காப்பியர் எங்கே சொன்னார்? இடம் சுட்டுக. விடைகள் வரும் மீனம் உ0 (03-04-2008) க்குள் வந்து சேர வேண்டும். |