
|
மாணாக்கர் பக்கம்
மாணாக்கர் பரிசு திட்டம்-136 இன் விடைகள்: 1. துரும்பு தூணாகுமா? எறும்பு யானையாகுமா? 2. கொட்டினால் தேள்; கொட்டாவிட்டால் பிள்ளைப்பூச்சியா? 3. விரல் உரல் ஆனால் உரல் எப்படியாகாது? 4. வல்லடி வழக்கைச் சொல்லடி மாமி 5. பெட்டைக்குதிரைக்கு இரட்டைக்கொம்பு முளைத்தது என்பதுபோல 6. தாய்வீடு ஓடிய பெண்ணும் பேயோடு ஆடிய கூத்தும் ஒக்கும். 7. பூனைக்குக் கொண்டாட்டம்; எலிக்குத் திண்டாட்டம் 8. கைப்புண்ணுக்குக் கண்ணாடி வேண்டுமா? 9. குதித்துக் குதித்து மாவிடித்தாலும் குந்தாணிக்கு ஒரு கொழுக்கட்டையும் கிடையாது. 10. ஆறு கொண்டது பாதி; தூறு கொண்டது பாதி சரியான விடை யளித்தோர் : முழுவதும் சரியாக விடையயழுதிய திருக்களாச்சேரி இன்ப அன்பனுக்கு மிகச்சிறந்த பாராட்டுகள்! ஒரு பிழை மட்டும் செய்த கள்ளக்குறிச்சித் தமிழ்ச் செல்விக்கும், இரு பிழைமட்டும் இழைத்த திருலோக்கி அறிவரசனுக்கும் பாராட்டுகள்! மாணாக்கர் பரிசு திட்டம்-137
பின்வரும் இசைத்தமிழ்ப் பாடல்களை இயற்றியோர் யார் யார்? பொருத்துக.
விடைகள் வரும் மடங்கல் உ0 (5.9.2008) க்குள் வந்து சேரவேண்டும். |