எது பிழை! எது சரி!
பிழை
சரி
வரிச் செலுத்தினார் வரி செலுத்தினார்
வெண் அணுக்கள் வெள்ளணுக்கள்
இனிமையான குறளில் பேசினாள் இனிமையான குரலில் பேசினாள்
அரசு ஒதுக்கீடு கட்டணம் அரசு ஒதுக்கீட்டுக் கட்டணம்
வைசுணவி வைணவி
தனது இரண்டு கால்கள் தன் இரண்டு கால்கள்
ஒட்டவோ அல்லது எழுதவோ ஒட்ட அல்லது எழுத
ஒப்பந்த தொழிலாளர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்கள்
வட்டி குறைப்பு வட்டிக் குறைப்பு
எழுபத்தி மூன்று எழுபத்து மூன்று
பகடை காய்கள் பகடைக் காய்கள்
நூலில் கோர்த்தனர் நூலில் கோத்தனர்
ஆற்றுக்கரையில் ஆற்றங்கரையில்
பொய்மை வெளிவராது பொய்ம்மை வெளி வராது
புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளது புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன
மேம்பாடு துறை மேம்பாட்டுத் துறை
ஒவ்வொரு பூக்களிலும் ஒவ்வொரு பூவிலும்
இசை குடும்பம் இசைக்குடும்பம்
என்னாளும் காக்கின்றாய் எந்நாளும் காக்கின்றாய்
மனைகள் பிரிக்கப்பட்டுள்ளது மனைகள் பிரிக்கப்பட்டுள்ளன
இருநூறுக்கு மேம்பட்ட இருநூற்றுக்கு மேற்பட்ட
முன்னனி குழுமங்கள் முன்னணிக் குழுமங்கள்
சீருடைகள் தரமானதாக சீருடைகள் தரமானவையாக
எல்லா சீருடைகளும்எல்லாச் சீருடைகளும்
பள்ளிக்கூடம் தெருபள்ளிக்கூடத்துத் தெரு
பதிவேடு தொழில்பதிவேட்டுத் தொழில்
இரும்பு துகள்கள்இருப்புத் துகள்கள்
வெளியீடு எண்வெளியீட்டு எண்
தொழிற் நுட்பம்தொழில் நுட்பம்

- அரங்க.பணிக்குன்றன்