மாணாக்கர் பக்கம்

மாணாக்கர் பரிசு திட்டம்-134க்கான விடை :

திருக்குறளில் ஒற்றெழுத்துப் பயிலாத குறட்பா இல்லை.
இந்தச் சரியான விடையை எழுதியோர் ஒருவரும் இலர்.

மாணாக்கர் பரிசு திட்டம்-135

நாலென விளங்கும் எங்கள் நண்பனே, முதல்வ னேகேள்!
பாலென மொழியும் மூன்றும் பகர்முகம் இரண்டும் கொண்டாள்
நாலொடு மூன்றும் போலும் நற்குழல் ஆறா னாலும்
மேலைநாள் கிழமை யன்பு மிகுந்திட வாழ்க வாழ்க!- இரா.தி.

இஃதொரு திருமண வாழ்த்து. இதன் பொருள் என்ன? விடையை வரும் ஆடவை உக (5.7.2008) க்குள் வந்து சேருமாறு அனுப்புக.


மு.க. அழகிரி பிறந்தநாளுக்கு இந்தியில் சுவரொட்டி!

'தமிழைக் காக்க அவதாரமெடுத்துத் தனிமைச் சிறையில் வாடினேன்' என்பார் - 'மொழிப் போர்' தியாகிகளுக்கு வாழ்வுப் பணம்' என்பார் - 'உயிர் தமிழுக்கு உடல் மண்ணுக்கு' என்று வசனம் பேசுவார்! இதெல்லாம் மேடை நாடகத்தில் தான். உண்மையில் அப்படியன்று

மு.க. அழகிரி பிறந்த பொன்னாளுக்கு மூதூர் மதுரையில் இந்தியில் வாழ்த்துச் சுவரொட்டி ஒட்டி மகிழ்ந்திருக்கிறார்கள், தமிழாய்ப் பிறந்த தமிழ் இனத்தலைவரின் மகனார் விருப்பப்படி!

- செய்தி : வி. தமிழ்பித்தன், நன்மங்கலம்.