
|
கள்ளோ காவியமோ? எடுப்பு கள்ளோ? காவியமோ?
கனித்தமிழில் வடித்த கம்பனின் பாடல்கள் (கள்ளோ) தொடுப்பு சொல்லே சுவையாகும் - தமிழ்ச்
சொல்லே சுவையாகும் - அதைச் சொல்பவர் சொன்னால் பல்பொருள் பயக்கும் சொல்லே சுவையாகும் (கள்ளோ) முடிப்புகள் 1. பிள்ளை பேசும் கிள்ளைத் தமிழில்
கொள்ளை யின்பம் கொள்eக் கிடக்கும் துள்ளித் திரியும் கன்றும் தமிழைச் சொல்லி யழைக்கும் அம்மா என்றே (கள்ளோ) 2. தேனை உண்டு முரலும் வண்டு
பாடும் பாட்டிலும் பல்லிசை உண்டு தீந்தமிழ்ச்சொல் இனிமை கண்டு தெய்வம் கூட மயங்கும் இன்று (கள்ளோ) 3. ஏன் தமிழில் பேச வேண்டும்
என்பாரும் இங்கே உண்டு தான்தமிழர் என்பதை யே தாமறியாப் பேதைய ரே (கள்ளோ) 4. செந்தமிழ்க் காப்பியத்துள் சிறப்பாகக் கூறும்
பைந்தமிழ்ப் பனுவல் சிலப்பதி காரம் வண்ணத் தமிழில் வாழ்வியற் பொருளை வகுத்துத் தந்தது வள்ளுவன் குறளே மண்ணில் மாந்தன் வாழும் நாள்வரை மறைநூல் குறளை மறுப்பவர் உளரோ? (கள்ளோ) |