
|
பாவலர் பரிசுதிட்டம்
பாவலர் பரிசுதிட்டம்-42இல் பரிசு பெற்றவர்
பாவலர் பரிசு திட்டம்-42
உரூபா 500 பரிசு பெறும் பாடல் : 1.எங்கடமிழ்ச் சொல்லினிலை யிஃதென் றுயர்த்தியே வெளியீட்டுக்குத் தேர்வுபெற்ற பாடல்கள் (தரவரிசைப்படி): 2.எங்கடமிழ்ச் சொல்லினிலை இஃது; தமிழ்மறவர் 3.எங்கடமிழ்ச் சொல்லின் நிலையிஃதெம் இல்லமெலாம் 4.எங்கடமிழ்ச் சொல்லினிலை யிஃதென் றியம்புதற் 5.எங்கடமிழ்ச் சொல்லினிலை யிஃதெனவே சுட்டிடவோ? 6.எங்கடமிழ்ச் சொல்லினிலை இஃதெனவே சொன்னலத்தைப் 7.எங்கடமிழ்ச் சொல்லினிலை இஃதென்று போற்றியே 8.எங்கடமிழ்ச் சொல்லி னிலையிஃது முன்னாள்முச் 9.எங்கடமிழ்ச் சொல்லினிலை இஃதென்றே சொல்லியழ முன்னரே பரிசு பெற்றறோரின் பாடல்கள் : 1.எங்கடமிழ்ச் சொல்லினிலை இஃதென் றிதன்மாண்பை 2.எங்கடமிழ்ச் சொல்லின் நிலையிஃது நாட்டினிலே 3.எங்கட மிழ்ச் சொல்லினிலை இஃதென் றறியா தார் 4.எங்கடமிழ்ச் சொல்லினிலை யிஃதாய்த் தனித்தமிழை 5.எங்கடமிழ்ச் சொல்லினிலை இஃதென் றெடுத்துரைத்துப் கருத்தூன்றுக
சென்ற இதழில் கொடுக்கப்பட்ட, 'எங்கள் தமிழ்ச்சொல்லின் நிலை இஃது', என்ற தொடரின் சொற்களை முறைப்படிப் புணர்த்தால், 'எங்கடமிழ்ச் சொல்லி னிலை யிஃது' என்றாகும்.இதனை வெண்பாவின் தொடக்கத்தில், 'எங்கடமிழ்ச் சொல்லினிலை இஃது' என்றோ, 'எங்கடமிழ்ச் சொல்லி னிலையிஃது' என்றோ முதல் மூன்று சீராக அமைத்துக் கொள்ளலாம். அல்லது, 'எங்க டமிழ்ச்சொல் லினிலை இஃது' என்று வெண்பா முதலடியாகவும் அமைக்கலாம். ஆனால், 'டமிழ்ச்சொல் லினிலை' என்று வகையுளி செய்து சீர்பிரிப்பது விரும்பத்தக்கதன்று. எனவே முதல்வகைச் சீர்ப்பிரிப்புகளே கொள்ளத்தக்கன. காட்டாக, தங்க டனமிருக்கத் தார்வேந்த ரெல்லாரும் என்ற ஒப்பிலாமணிப், புலவரின் தனிப்பாடலைக் காண்க. "எங்கடமிழ்ச் சொல்லினிலை இஃது என்ற சீர்ப்பிரிப்பில் இத்தொடர் முழுவதும் வெண்பாவின் ஈற்றடியாகவே அமைகிறது. வெண்பாவின் தொடக்கத்தில் இதனை 'எங்கடமிழ்ச் சொல்லினிலை இஃது' என்று முதல் மூன்று முழுச்சீர்களாகவோ, இஃது என்ற சொல்லுடன் வேறு சொல்லைச் சேர்த்து மூன்றாஞ்சீராகவோ அமைக்கலாம். எங்கடமிழ்ச் சொல்லினிலை இஃதென்று நாணமின்றி என்பது போல நேரிசை வெண்பாவை அமைக்கலாம். இவ்வகையில் இயற்றப்படுவது ஒருவிகற்ப நேரிசை வெண்பாவாக இருக்கும். இனிப் பரிசு திட்டத்துக்கு வந்த பாடல்களிற் சிலவற்றைப் பார்க்கலாம். 1. சிலர் 'எங்கள்' என்று தொடங்கி 'இஃது' என்று முடித்திருந்தனர் ஆனால் கொடுக்கப்பட்டதொடரை மறந்தனர். சிலர் 'எந்தமிழ்' என்று மாற்றிக்கொண்டனர். 2. சிலர் 'எங்கள்' என்று தொடங்கி, 'என்றே', 'நிலை' 'இனிப்பு', 'ஈது' என்பன போன்ற சொற்களால் முடித்திருந்தனர். 3. சிலர் 'தமிழ்ச்சொல்லின் + நிலை' என்பதைத் 'தமிழ்ச்சொன்னிலை' என்று தவறாகப் புணர்த்தெழுதியிருந்தனர். 4. சிலர் 'எங்கள்+தமிழ் = எங்கட்டமிழ்' என்று புணர்த்தெழுதியிருந்தனர். 5. சிலர் 'எங்கள்(ட்)டமிழ்' என்று டகரவொற்றை அடைப்புக்குள் இட்டிருந்தனர். வல்லொற்றுகள் எங்கும் அவ்வாறு அடைப்புக்குள்வாரா. 6. 'தமிழ்ச்சொல்லி னிலையிஃது' என்பது தளைவழு 7. 'நிலையிஃது என்றுரைத்த' என்பது 'நிலையிஃ தென்றுரைத்த' என்று புணர்ந்து சீரும் தளையும் சிதையும். 8. நேரிசை வெண்பா என்ற குறிப்பை நோக்காது ஒருவர் நேரிசை யாசிரியப்பா இயற்றி, அதன் தொடக்க இறுதிகளில் கொடுத்த தொடரை அமைத்திருந்தார். 9. 'ஏற்றமுரும்' - சொற்பிழை; 'ஏற்றமுறும்' என்று வரல்வேண்டும் 10. ஆயிற்றெங்- கள்தமிழ் என்று சீர்பிரித்துக் கள்தமிழ் என்பதை ளகர எதுகையாகக் கொண்டிருந்தார். தகரத்தின்முன் ளகரம் புணர்ந்து டகரமாகி நிற்கும் அல்லது கெடும். 11. எ-லி ; தி-மொ- இவை மோனையாகா. 12. எங்கள் என்பதற்கு ஆங்கிலம் எதுகையாகாது - முதலெழுத்துகள் எ-ஆ எனக் குறிலும் நெடிலுமாய் இருத்தலின். 13. சங்கதம் (தொடர்பு), மந்திரிகள் (அமைச்சர்கள்), இருடி (துறவி), மோகம் (காதல்) - ஆகியன தமிழல்ல. பாவலர் பரிசு திட்டம் - 44
'ஞாயிறுதிங்கயளத்திசை யயழினு நமக் என்பது ஒருவகை மண்டிலப்பாவின் ஓரடி. இதனை முதல் நடு இறுதி என எங்கேனும் அமைத்து ஒரு பாடல் இயற்றி வரும் கடகம் உ0 (5.8.2008)க்குள் விடுக்க. |