
|
தொல்காப்பியத்துட் கண்ட தலைவன் - தலைவியர்
புலவர் தி. சா. கங்காதரன், புதுச்சேரி(தொடர்ச்சி) பெரும்பான்மையும் தோழியே அவன் புலத்தலைத் தணிக்க முற்படுமவள், அவனை "அன்பிலை. கொடியை” என்றலுமுண்டு (157, 158). தன்னையே என்றும் வழிபட்டு வாழும் நிலையினளாகிய தலைவியின் புலவியும் ஊடலும் தீர்தற் பொருட்டாகத் தலைவன் தன்னைத் தாழ்த்திக்கொண்டு பணிமொழி கூறுதலே மரபு (160, 227). 'அவன்குறிப் பறிதல் வேண்டியும், கிழவி 'மனைவி உயர்வும் ...புலவியுள் உரிய..' 227 பரத்தையர்பாற் பிரிந்து செல்லும் தலைவன் தன் மனைவி பின்முறை வதுவைக் கிழத்தியை எதிரேற்று நன்றாற்றுவதும், அவளும் தன்முன்னவள் புதல்வன்பால் அன்பு பாராட்டுவதும் கண்டு. அத்தகு மாசற்ற காதலரை விடுத்துத் தான் பரத்தையர்பால் சேறல் தவறு என மனங்கொண்டு தனது இல்லம் மீண்டு, அப்பரத்தையர் தொடர்பினை அறவே நீத்தலுமுண்டு (172). 'பின்மறை யாக்கிய பெரும்பொருள் வதுவைத் புலவிக்காலத்தே தலைவன் தலைவியை வானளாவப் புகழ்வான். 'நிகழ்தகை மருங்கின், வேட்கை மிகுதியில், யாறும் குளனும் காவும் ஆடி நுகரத் தலைவியோடு அவன் பதியிகந்து போதலுமுண்டு (191). அவன் பரத்தையரோடு நீராடியமை கேட்டு அவள் புலத்தல் இயல்பு (164). கற்புக்காலத்தே ஓதல்-நாடுகாவல்-தூது-பகை-பொருள் தேடல்-எனுமிவற்றினிமித்தம் தலைவன் தலைவியைப் பிரிந்து வைகும் காலவரை ஓர்யாண்டே (188-190). பாசறைக்கண் தங்கும் பிரிவொழித்த ஏனைய பிரிவுகளிடைத் தலைவி தனது பிரிவை யாற்றாள் என்று அவளை அவன் உடன்கொண்டு சேறலுமுண்டு (175). தலைவியைப் பிரிந்து வினைவயின் சென்றோன், அவ்வினை முடியுங்காறும் அப்பிரிவினை நினைத்து வருந்துதலிலன். குறித்த பருவம் கடந்தவழியும், தலைவி தன்பால் விடுத்த தூதுவரக் கண்டவழியும், எடுத்த வினையை வெற்றியொடு முடித்தவழியும் அவன் அவளை நினைந்து புலம்புறுவான் (186). தலைவன் தன்னைப் பிரியலுறும்போதெல்லாம் அப்பிரிவு குறித்துத் தலைவி வருந்துவாள் (184). அவளை அமைதியுறுப்ப வேண்டியே, அவன் சின்னாள் அவளோடு மனைக்கண் தங்குவானன்றி, தான் முன்னர்ச் சூழ்ந்தவாறே அவளைப் பிரிந்து வினைமுடித்தே மீள்வான் (185) 'துன்புறு பொழுதினும் . . . சேற லில்லை.' தான் பிரியுமுன்னர் அவள்பால் தான் கொண்டுள்ள அன்பினை வெளிப்படுத்து முகத்தான் அவளை மிகப் புகழ்வான் (232), தான் செய்யும் நற்காரியங்கள் பற்றி அவளிடம் தன்னைப் புகழ்ந்து கூறிக்கோடலும் உண்டு (181). 'செய்பொரு ளச்சமும் வினையிற் பிரிவும் சேயிடை வினைவயின் சென்றோன், நெடுஞ்சேய்மைத்தாயினும் இடையே யாண்டும் வைகாது தன் இல்லம் கடிதின் மீள்வான் (194). 'வினைவயின் பிரிந்தோன் மீண்டுவரு காலை இங்ஙனம் இல்லறம் பேணி வாழும் கிழவோன், ஆண்டு மூப்பவே, காம இன்பத்தில் பற்றற்று, அறமுதல் மூன்றினும் சிறந்த வீட்டின்பம் எய்த, தன் சுற்றத்தோடு வேண்டுவன மேற்கொள்ள முற்படுவான் (192). 'காமம் சான்ற . . . . இனி அடியோர் வினை வல பாங்கினோர் தாமும் கைக்கிளை பெருந்திணைக்கண் தலைவராதற்குரியர் (23). தம் மனத்தே நிகழ்பவற்றைக் கரந்து தம் தலைவியரிடம் பேசுதலும் இவர்கள்தம் இயல்பு (211). 'அடியோர் பாங்கினும் . . . என்மனார் புலவர்' இனித் தலைவியைப் பற்றிய செய்திகள் தலைவி, மனைவி எனவும் கிழத்தி எனவும் கிழவி எனவும் கிழவோள் எனவும் மனையோள் எனவும் சுட்டப்பெறுவாள். 'மனைவி உயர்வும்' 227.,'ஒத்த . . . கிழத்தியும் காண்ப' (93) இவள் பெண்ணிற் கமைந்த நற்பண்புகள் ஒருங்கே அமையப்பெற்றுப் பெருவனப்பினாலும் ஒப்பற்றுத் திகழ்பவள் (209). 'செறிவும் நிறையும் . . . பெண்பாலான, அச்சமும் நாணும் மடனும் காரணமாகத் தலைவனோடு முதற்கண் மெய்யுறுபுணர்ச்சி மேவாதாள்' (99). 'பாலது ஆணையின்' (93) அவனோடு இரண்டுமூன்றுநாள் அவ்விடத்தேயே தலைப்பெய்து மருவுவாள் (102). இந்நாள்களில் அவள்பால் விளைந்த புதுமைநலம் அவளுடைய கண்முதலிய உறுப்புகளில் குறிப்பால் நிகழும் (108). 'காமத் திணையில் கண்நின்று வரூஉம் தோழியிற் கூட்டத்தின்கண், அவள் தன் பாங்கியிடம் கொண்ட செறிந்த நட்பினால் நாணும் மடனும் நீங்கத் தன்னிலையைக் கூறுதலுமுண்டு (110). 'சொல்லெதிர் மொழிதல் அருமைத் தாகலின் தலைவனோடு களவொழுக்கம் நிகழ்த்தும்வழி அவள் அவனிடம் தானே நேராகவோ தோழிவாயிலாகவோ குறியிடத்தினைக் குறிப்பாள். 'அவன்வரம் பிறத்தல் அறம்தனக் கின்மையின் (தொடரும்) |