தெளிதமிழ் இதழின் ஆசிரியர் பொறுப்பில் சில மாற்றங்கள்

29-12-2007 அன்று கூடிய புதுவைத் தமிழன்பர்கள் தமிழ்ப்பணி அறக்கட்டளையின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி. அடுத்த கும்பம் (13-2-2008) இதழ் முதல் ஆசிரியர் பொறுப்பில் பின்வரும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன: சிறப்பாசிரியராக முனைவர் இரா. திருமுருகனும். ஆசிரியர் குழுவில் பேராசிரியர் ம. இலெ. தங்கப்பா, கலைமாமணி புலவர் அரங்க.நடராசன், கலைமாமணி புலவர் நாகி, புலவர் பணிக்குன்றன், புலவர் செ. இராமலிங்கன், கலைமாமணி புலவர் இலக்கியன், பேராசிரியர் தேவமைந்தன், பைந்தமிழ்ப்பாவலர் இரா. இளமுருகன் ஆகியோரும் இருப்பார்கள்.

இனி, மடல்கள், (நன்கொடைகள் ஆகியவற்றுக்கான) பணவிடைகள் ஆகியவற்றை, ஆசிரியர், தெளிதமிழ், 77, பாரதிதாசன் தெரு, அசோக நகர், புதுச்சேரி-605008 என்ற முகவரிக்கு அனுப்புக. காசோலைகளைத் தெளிதமிழ் என்ற பெயருக்கு அனுப்புக.