எது பிழை! எது சரி!
பிழை
சரி
கட்டுப்பாடுக் குறித்து கட்டுப்பாடு குறித்து
நாட்டுப்பற்று குறித்து நாட்டுப்பற்றுக் குறித்து
நாளைத் திரும்புகிறார் நாளை திரும்புகிறார்
வெளிநாடு சேவை வெளிநாட்டுச் சேவை
மாடை ஓட்டவில்லை மாட்டை ஓட்டவில்லை
நன்றாகயில்லை நன்றாகவில்லை
வெற்றிவாகைச் சூடினார் வெற்றிவாகை சூடினார்
சமூகநீதி பேரவை சமூகநீதிப் பேரவை
புற்றீசல்போல தோன்றும் புற்றீசல்போலத் தோன்றும்
சூழ்நிலைக் காரணமாக சூழ்நிலை காரணமாக
அமைச்சர் உட்பட பலரும் அமைச்சர் உட்படப் பலரும்
கட்சித் தலைமையேற்றது கட்சி தலைமையேற்றது
உறுதியாக தேர்தல் வரும் உறுதியாகத் தேர்தல் வரும்
அதுபற்றி சொல்லி சிக்கலாக்க அதுபற்றிச் சொல்லிச் சிக்கலாக்க
மதுவிலக்கு கொண்டுவர மதுவிலக்குக் கொண்டுவர
முயற்சிக்கிறார்கள் முயல்கிறார்கள்
கையெழுத்து பெற கையெழுத்துப் பெற
மேற்படி கருத்து மேற்படிக் கருத்து
அதற்குதான் அதற்குத்தான்
தன்னாட்சி தகுதி தன்னாட்சித் தகுதி
நச்சுக்காற்று பாதிப்பு நச்சுக்காற்றுப் பாதிப்பு
சிகிச்சை பிரிவு சிகிச்சைப் பிரிவு
நட்பு காதலாக மலர்ந்ததுநட்புக் காதலாக மலர்ந்தது
விழிப்புணர்வு சங்கம்விழிப்புணர்வுச் சங்கம்
சும்மாயிருசும்மாவிரு
வரவேற்க தமிழர் முயன்றனர்வரவேற்கத் தமிழர் முயன்றனர்
இனி கிடைக்காதுஇனிக் கிடைக்காது
அதைவிட செலவு மிகுதிஅதைவிடச் செலவு மிகுதி
கட்டப்பட்டு செயல்படுகின்றதுகட்டப்பட்டுச் செயல்படுகின்றது
காற்றழுத்த தாழ்வுநிலைக் காரணமாககாற்றழுத்தத் தாழ்வுநிலை காரணமாக