
|
நூல் நிறை
முழுப்புரட்சியை முன்மொழிந்தவன்: ஆசிரியர்: பாவலர் தணிகைச் செல்வன். வெளியீடு: தமிழம்மா பதிப்பகம், 59, விநாயகபுரம், அரும்பாக்கம், சென்னை-600 106. பாவேந்தரைப் 'புரட்சிப்பாவலர்' என்றழைப்பதையே தான் பெரிதும் விரும்புவதாக அறிவித்துள்ளார் ஆசிரியர். வகுப்புப் புரட்சி-குமுகப் புரட்சி-தமிழ்த்தேசியப் புரட்சி ஆகிய மூன்று உருவளவைகளில் முழுப்புரட்சியை முன்மொழிந்தவர் என்பதால், தமிழின் முதல் புரட்சிப்பாவலர் பாரதிதாசனே என்று மொழிகிறார் நூலாசிரியர். தமிழினத்தின் விடுதலை, பொருளியல் உழைக்கும் வகுப்பின் விடுதலை, ஒடுக்கப்பட்ட சாதிகளின் விடுதலை ஆகிய முந்நிலைகளில் புரட்சிப் பாவலர் பாடிய 'உலகப்பன் பாட்டு' முதலானவற்றை ஏற்ற வகையில் மேற்கோள் காட்டியுமுள்ளார். 'சிவப்புச் சிந்தனையாளர்' என்று பாவேந்தரை இனங்காட்டியுள்ளமை இந்நூலின் சிறப்பு. |