
|
மாணாக்கர் பக்கம்
சென்ற இதழ் மாணாக்கர் பரிசு திட்டம்-129இல், பரவையே கல்வி காரம் பகல் அன்னை இடையெ ழுத்தும் என்று விடுகதை தந்திருந்தோம். இதில் வரும், தெளிவுக்காகச் சொற்பிரித் தெழுதப்பட்ட திருக்குறட் பகுதிகளின் புணர்த் தெழுதப்பட்ட வடிவங்கள். பரவை, கல்வி, காரம், பகல், அன்னை ஆகிய சொற்களின் இடையெழுத்துகளையும், கரடி பால், வெள்ளை, பிள்ளை ஆகிய சொற்களின் முதலெழுத்துகளையும் எடுத்தெழுதினால் முறையே, ர ல் ர க ன் க பா வெ பி என வரும். இவற்றை நிரல்பட நிறுத்தினால் இந்த விடுகதையின் விடை வரும். அது: பிரபாகரன் வெல்க! என்பது. சரியான விடையனுப்பியோர் *சு. கவினரசு-புதுச்சேரி-10,
* இக் குறியிடப்பட்டோர் பரிசு பெறுகின்றனர். மாணாக்கர் பரிசு திட்டம்-130
தமிழில் இன்ன எழுத்து, சொல்லின் முதலில் வரும். இன்ன எழுத்து சொல்லின் இறுதியில் வரும். இன்ன எழுத்தை அடுத்து இன்ன எழுத்தே வரும் என்ற மரபு உண்டு. அதன்படி அமையாத பிறமொழிச் சொற்கள் தமிழில் கலந்திருந்தால் அவற்றை எளிதில் அறிந்துகொள்ளலாம். அடியில் அத்தகைய பிறமொழிச்சொற்களுடன் தமிழ்ச்சொற்களும் கலந்து தரப்பட்டுள்ளன. அவற்றில், பிறமொழிச் சொற்களைமட்டும் இனங்கண்டு எடுத்தெழுதி, வரும் சுறவம் உ0 (3-2-2008)க்குள் அனுப்புக. ஞமலி, ஆர்வம், ஆத்மா, சக்தி, யோசனை, இருண்ம், சைவம், பல்டி, யூகம், பாட்னா, கர்வம், வெந்நெய், புகற்சி, அற்சிரம், பல்கி, பாக்யம், சத்யம் அர்த்தம், லேசர், பொற்பு, உவர்ப்பு, பத்ரம். |