 |
பைந்தமிழ்ப்பாவலர் மு. வே. கங்காதரன் 22-12-2007 அன்று தம் 67ஆம் அகவையில் இயற்கை எய்தினார்கள். சந்தம், வண்ணம், உருப்படி, சிந்து என்ற நால்வகை இசைத்தமிழ் யாப்பிலக்கணங்களையும் முனைவர் இரா. திருமுருகனிடம் முறையாகப் பயின்று புதுவைத் தமிழன்பர்கள் தமிழப்பணி அறக்கட்டளையில் தேர்வெழுதிப் பைந்தமிழ்ப் பாவலர் பட்டம் பெற்று, அவ்வகைப் பாக்களில் பல நூல்களைப் படைக்கும் பாத்திறன் பெற்றவராகத் தமிழ்நாட்டுக்கே ஒருவராக அவர் இருந்தார். அன்னாரின் நினைவேந்தலும் பன்மலர்ச்சோலை, நெருப்பில் குளித்த நிலா என்ற நூல்களின் வெளியீடும் 12-1-2008 அன்று சென்னையில் நிகழ்ந்தன. அவர்தம் கொள்கைவழி வாழ்ந்துவரும் குடும்பத் தாருடன் நாமும் அவரைப் பிரிந்து கையற்றுக் கலங்குகின்றோம்.
|