
|
அறிவியற் சொல் ஒலி வடிவங்கள்
இரா. செம்பியன் (தொடர்ச்சி) 'S' இவ்வாங்கில ஒலியைக் குறிக்க சகரத்திற்குப் பின் ச்I இப்படி ஒலிக்குறியிட்டு வழங்கப்பட்டுள்ளது. இனியிச் சகரம் S என்ற ஒலியேற்றப் பெற்றச் சகரமாம், இதற்கிணையாக வடதமிழ் கிரந்தமான ஸ என்ற எழுத்தின் மேல் புள்ளியிட்டு வழங்கி வருகின்றார்கள். எனவே நம் மொழியில் நாமிப்படிக் குறி இயற்றிக் கொள்வதில் எந்தச் சிக்கலும் இல்லைத்தானே? எந்த மொழியிலும் மெய்ம் மட்டும் தனித்து இயங்குவதில்லை. எனவே ஒலிப் பெயர்ப்பதற்கு ஏந்தாக நமது நெடுங்கணக்கிலுள்ள சகரத்தினும் மெல்லொலித் தேவைப்படுமிடத்து ஆங்கில நெடுங்கணக்கின் ஈற்றெழுத்தான Z என்ற மென் சகர ஒலிக்கு இணையாக சI இவ்வாறு குறிகளிட்டுப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதே சகரத்தின் வடிவை ஒற்றெடுக்கச் செய்து ச்I இவ்வாறு S என்ற ஏற்றித் தமிழுக்குக் கொண்டு வருகின்றோம் என்பதைத்தான் மேலே கண்டோம். இப்படி ஒற்றெடுத்து வரும் இவ்வெழுத்தொலி பல்லிடுக்கு வழியே சீழ்க்கையொலிபோல் பிறந்து மாத்திரையளவைக் கடந்து ஒலிப்பதால். ஏனைய ஒற்றினத்தோடு சேர்க்காமல் தனித்து விடப்பட்டது. Iக்Iச்/ச்Iட்Iத்Iப் /ப் இனியிவ்வொலி எழுத்துக்களைப் பயன்படுத்திச் சிறுசிறு அறிவியல் சொற்களை உருவாக்கிப் பயிலுவோம்.
ஒலிக்குறி ஏற்ற எழுத்துக்கள் இரட்டுமிடத்து ஒலிக்குறியை மட்டும் இரட்டித்தால் போதும். மேலே குறித்தவாறு ஆ//பிச்I என்பது போல அறிவியல் தமிழ் ஒலிபெயர்க்கும் பணி இந்த அளவில் நிறைவு செய்யப்படுகின்றது. இப்பணியின் நோக்கம் அறிவியல் துறை வழியே தமிழின் வரிவடிவத்திற்குள் சொல்லளவிலோ எழுத்தளவிலோ பிறமொழிகள் வந்தமருவதைத் தடுத்தாக வேண்டும் என்பதே. ஒலிவடிவால் ஏற்படும் கலப்படம் காற்றோடு போய்விடுகின்றது, காலத்தால் அழியக்கூடியது. ஆனால் வரிவடிவில் ஏற்படும் கலப்படம் கல்வெட்டுகள் செப்பேடுகள் வரலாற்றுப் புதினங்கள் போன்ற வரிவடிவங்களில் இடம் பிடித்துக் காலத்தை வெல்லக் கூடியது. இப்படி எழுத்தில் ஏற்படும் கலப்படத்தை எந்தத் தமிழறிஞரும் ஏற்க விரும்புவதில்லை என்பதற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகள் ஏற்புழி ஆங்காங்கே எடுத்துரைக்கப்பட்டுள்ளதை நேயர்கள் அறிவீர்கள். இருப்பினும், அவற்றைத் தடுக்கவும் முடியவில்லை ஏற்கவும் முடியவில்லை. இருப்பினும் அறிவியல் துறையின் சொற்பரப்பை விரிவு செய்தாக வேண்டும் அவ்வாறு செய்யும் பொழுது ஒலிகளுக்காகக் கடன்வாங்கி எழுதக்கூடாது. அறிவியல் சொற்களை ஒரு மொழிக்குக் கொண்டு செல்வதற்கு மூன்று வழிகள் உள்ளன. 1. மொழியாக்கம் செய்வது. இம்மூன்று வழிகளையும் ஏறத்தாழ எல்லா மொழிகளிலும் இப்பொழுது காணலாம். மூன்றாவதான அப்படியே ஏற்றுக் கொள்வது என்ற முறையை எந்த மொழி தழுவினாலும் அந்த மொழி அத்துறையில் சுருங்கிப் போகும். மொழிபெயர்ப்பு என்பது ஒருகட்டடத்தின் அமைப்பைப் பார்த்துப் பார்த்துக் கட்டும் கட்டடத்திற்கு இணையானது அதாவது மாதிரிக்கு எடுத்துக்கொண்ட கட்டடத்தின் அமைப்புகள் அப்படியே இருக்குமாறு பார்த்துக் கொள்வது. அடுத்து மொழியாக்கம் செய்வதென்பது பொருளின் பண்பையும் பயன்பாட்டையும் குறித்து நிற்கும்படியான சொல்லை உருவாக்கிக்கொள்வது. இதில் மூன்றாவது வழியைத்தான் ஆங்கிலம் பின்பற்றி வருகின்றது. மொழிகள் வெவ்வேறாக இருந்தாலும் வரிவடிவில் ஆங்கிலமாகவே இருப்பதுபோல் நாமும் நமது மொழி அறிவியல் நூல் வரிவடிவங்களைத் தமிழாகவே இருக்குமாறு ஏன் பார்த்துக் கொள்ளக் கூடாது? அறிவியல் தமிழுக்குள்ளே பிற மொழிகளை நுழையவிட்டு நமது மொழியின் தனித் தன்மையை ஏனிழந்துபோக வேண்டும்? என்பன போன்ற வினாக்களுக் கெல்லாம் விடையளிக்கின்றன மேற்போந்த அறிவியல்சொல் ஒலி வடிவங்கள். மேலே அட்டவணையில் தரப்பட்டுள்ள ஒலிக்குறிகள் இணைக்கப்பட்ட தமிழெழுத்து வடிவங்களைக் கொண்டே அனைத்து அறிவியல் சொற்களையும் பிறமொழி எழுத்துக்களே கலவாமல் முழுவதும் தமிழாலேயே எழுத முடியும் என்பதை ஒரு குறுஞ்சொல் பட்டியல் மூலம் விளக்கியிருந்ததைப் புரிந்து கொண்டிருப்பீர்கள். மேலும் பயிற்சிக்காக ஒலிகளால் இடர்ப்படும் சற்று நீண்ட ஆங்கிலச் சொற்றொடர்களைத் தமிழாக்கி இத்துடன் இணைத் துள்ளோம். முயன்று எழுதுங்கள் முழுவதும் தமிழாகும் வாழ்க தமிழ்! விழித்தெழுக தமிழ்க் குமுகாயம்! (தொடரும்) |