
|
துணுக்குகள்
ஆணிகட்டின தோல் செருப்பால்
அடித்தது போல ஒரு தீர்ப்பு!
"தைம் முதல் நாளைத் தமிழர் புத்தாண்டு முதல் நாளாகத் தமிழக அரசு அறிவித்துச் செய்த சட்டம் செல்லும்' என்று சென்னை உயர்முறை மன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. அச்சட்டத்தை எதிர்த்துப் பொதுநல வழக்கு(! )ப் போட்ட புண்ணியவான் போன இடம் தெரியாமல் போய் விட்டாராம்! அவரது இந்தப் "பொது நலப்பணி'யைப் பாராட்டி(! ) நடுவர்கள் அவருக்குப் பத்தாயிரம் உரூபாத் தண்டம் வேறு விதித்திருக்கிறார்களாம்! தனித்தமிழ் மன்றம் நடுப்பட்டி
தமிழர்கள் அனைவரையும் கொன்றுவிட்டு இலங்கை முழுவதும் சிங்களர் நாடு என அறிவிக்கத் திட்டமிட்டுச் செயல்படுகிற சிங்கள அரசுக்கு இந்திய அரசு படைக்கருவிகள் வழங்குகிறதே! தமிழ் இனம் அழிந்து போவதை இந்திய அரசு விரும்புகிறதா? |