
|
தமிழ் வளர்க்கும் தாளாண்மைகள்
நாளிதழ் நடவடிக்கைகள்: சென்ற இதழில் குறித்தபடி அறக்கட்டளைக்கு வந்த நன்கொடைத் தொகை மொத்தம்
சென்ற தெளிதமிழில் தெரிவித்தபடி அறக்கட்டளை நடத்த இருக்கும் இணையத்திங்களிதழின் பெயர் 'தமிழ்க் காவல்' என்று அறக்கட்டளை உறுப்பினர்கள் முடிவு செய்துள்ளனர். அதன் இணைய முகவரி : www.thamizhkkaaval.com என்பது. இப்பெயரினைப்பதிவு செய்து வடிவமைத்து வெளியிடும் பணிகள் நடந்து வருகின்றன. வரும் மார்ச்சுத்திங்கள் இறுதியில் இதழ் வெளியாகலாம். பதிவுக்கென ஆன செலவுத் தொகை உரு. 2010 பொருளர் திரு தி.ப. சாந்தசீலன் அவர்களே ஏற்றுக்கொண்டார்கள் என்பதை நன்றியுடன் தெரிவித்துக் கொள்ளுகிறோம். அருள்கூர்ந்து நன்கொடைகளை வழக்கப்படித் தமிழ்வளர்ச்சி அறக்கட்டளை என்ற பெயருக்குப் பணவிடையாகவோ கேட்புக் காசோலையாகவோ திரு தி.ப. சாந்தசீலன், பொருளர், 22, உடையார் தெரு, பாக்கமுடையான்பட்டு, புதுச்சேரி - 605 008. என்ற முகவரிக்கு அனுப்புக.
பாப்போட்டிப் பரிசளிப்பு விழா : வேலாயுதம்பாளையம் கருப்பண்ணன் செல்லம்மாள் இலக்கிய அறக் கட்டளையின் 10ஆம் ஆண்டு நிறைவுவிழா 30-01-2008 அன்று தலைவர் க. நாச்சிமுத்து அவர்கள் தலைமையில் நடைபெற்றது. பின்வருவோர்க்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
பாவலர் க. துரையரசன் எழுதிய "பிளிறல்கள்' என்ற நூல் வெளியிடப்பெற்றது. புதுச்சேரியில் மேலும் ஒரு மின்னிதழ் : புதுச்சேரி இலக்கியப் பொழில் இலக்கிய மன்றம் 25-01-08 அன்று மன்றத்தின் மின்னிதழ்த் தொடக்கவிழாவும் திருவள்ளுவர் விழாவும், விருதளிப்பு விழாவும் நடத்தியது. தொழில் முனைவர் பெ. பராங்குசம் வரவேற்புரையும், புலவர் பூங்கொடி பராங்குசம் நோக்கவுரையும் ஆற்றினர். முனைவர் இரா. திருமுருகன் www.ilakiapozhil.com என்ற முகவரியுடைய மின்னிதழைத் தொடங்கிவைத்து வாழ்த்தினார். திரு சீனு. வேணுகோபால் அவர்களுக்கு விருது வழங்கப்பட்டது. திரு கோவிந்தராசு பாராட்டிப் பேசினார்.
3-02-2008 அன்று செஞ்சியில் அன்னார்க்கு நினைவேந்தல் நிகழ்ந்தது. முனைவர் இரா. திருமுருகன் அன்னார் படத்தைத் திறந்துவைத்தார். வ.ந.தன்மானன் முதலிய பலர் நினைவேந்தலுரை யாற்றினர். வாழியூர்க் கம்பன் கழகத்தின் 29ஆம் ஆண்டுக் கம்பன் விழா : இவ்விழாவில் வாழியூரைச் சுற்றியுள்ள பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்புவரை ஒவ்வொரு வகுப்பிலும் தமிழில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு வழக்கறிஞர் வி.சி. தினகரன், உதவித் தலைமை ஆசிரியர் சுப்பிரமணியம் ஆகியோர் பரிசுகளை வழங்கினர் என்று கம்பன்கழகச் செயலர் வாழியூர் வே. இராசகோபாலர் தெரிவிக்கிறார்.
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||