பிழை |
சரி |
| கைக்கொடுக்கும் மாணவர்கள் |
கைகொடுக்கும் மாணவர்கள் |
| புத்தாண்டு பிறப்பு |
புத்தாண்டுப் பிறப்பு |
| அளித்தத் தீர்ப்பு |
அளித்த தீர்ப்பு |
| தீர்ப்பு கூறினார் |
தீர்ப்புக் கூறினார் |
| அடிக்கடிச் சென்றார் |
அடிக்கடி சென்றார் |
| அணைக்கட்ட வேண்டும் |
அணைகட்ட வேண்டும் |
| கற்பழிப்பு போன்ற குற்றம் |
கற்பழிப்புப் போன்ற குற்றம் |
| குற்றங்கள் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது |
குற்றங்கள் மெய்ப்பிக்கப்பட்டுள்ளன |
| இளமைக் குன்றியது |
இளமை குன்றியது |
| நமது கலைஞர் |
நம் கலைஞர் |
| வேலூர் தங்கக்கோவில் |
வேலூர்த் தங்கக்கோவில் |
| தலைமை தேர்தல் ஆணையர் |
தலைமைத் தேர்தல் ஆணையர் |
| ஆசிரியர் பயிற்சி பள்ளி |
ஆசிரியர் பயிற்சிப்பள்ளி |
| மும்முனை போட்டி |
மும்முனைப் போட்டி |
| தமிழ் புத்தாண்டு |
தமிழ்ப் புத்தாண்டு |
| தலைகீழ் திருப்பம் |
தலைகீழ்த் திருப்பம் |
| ஐந்நூறுக்கு மேற்பட்டோர் |
ஐந்நூற்றுக்கும் மேற்பட்டோர் |
| மலர் கண்காட்சி |
மலர்க் கண்காட்சி |
| காய்கறி தோட்டம் |
காய்கறித் தோட்டம் |
| தை திங்கள் |
தைத் திங்கள் |
| முதல்வரின் கருத்து ஏற்புடையதல்ல |
முதல்வரின் கருத்து ஏற்புடையதன்று |
| புனைப் பெயர் |
புனை பெயர் |
| திருமண களஞ்சியம் | திருமணக் களஞ்சியம் |
| அம்பலத்தாடையர் மடம்தெரு | அம்பலத்தாடையர் மடத்துத்தெரு |
| ஒன்று ஒன்றாக செல்லுங்கள் | ஒருவர் ஒருவராகச் செல்லுங்கள் |
| எண்சுவடி வாய்ப்பாடு | எண்சுவடி வாய்பாடு |
| விளம்பர பலகைகள் | விளம்பரப் பலகைகள் |
| குடும்ப தகராறில் | குடும்பத் தகராற்றில் |