மாணாக்கர் பக்கம்

சென்ற இதழ் மாணாக்கர் பரிசுதிட்டம் - 130 இன் விடை :

கொடுக்கப்பட்ட சொற்களில் பிறமொழிச் சொற்களும், அவை தமிழாகாமையின் காரணங்களும் :

ஆத்மா -த் என்ற மெய்யை அடுத்து ம வந்துள்ளது.
சக்தி -க் என்ற மெய்யை அடுத்து தி வந்துள்ளது.
யோசனை -யோ மொழிமுதலில் வந்துள்ளது.
சைவம் -சை மொழிமுதலில் வந்துள்ளது.
பல்டி -ல் என்ற மெய்யை அடுத்து டி வந்துள்ளது.
யூகம் -யூ மொழிமுதலில் வந்துள்ளது.
பாட்னா -ட் என்ற மெய்யை அடுத்து னா வந்துள்ளது.
கர்வம் -மொழிமுதற் குறிலை அடுத்து ர் என்ற மெய்வந்துள்ளது.
பாக்யம் -க் என்ற மெய்யை அடுத்து ய வந்துள்ளது.
சத்யம் -த் என்ற மெய்யை அடுத்து ய வந்துள்ளது.
அர்த்தம் -மொழிமுதற் குறிலை அடுத்து ர் என்ற மெய் வந்துள்ளது.
லேசர் -மொழிமுதலில் லே வந்துள்ளது.
பத்ரம் -த் என்ற மெய்யை அடுத்து ர வந்துள்ளது.

முழுவதும் சரியான விடையளித்தோர் :

ஒருவருமில்லை

மாணாக்கர் பரிசு திட்டம்-131

பின்வரும் தொடர்களைப் பிரித்தெழுதி, அவை வரும் திருக்குறட்பாக்களின் எண்களையும் குறிப்பிடுக :

காட்டு : பகடன்னானுற்ற = பகடு+அன்னான்+உற்ற (624)

செய்யவடவ்வையைஎனினுங்கௌறீது
நாணுதனாணுகேட்குஞாலநிரந்தினிது
பக்கத்துட்டெவ்வோர்மறைப்பினடுங்கஞர்
புத்தேணாடுண்டோஉண்டாண்டோரேஎர்
உண்ணடுங்கலஞ்சிஉக்கவமிழ்தற்றாறங்கணத்தர்

விடைகள் வரும் கும்பம் 20 (03-03-2008)க்குள் வந்து சேர வேண்டும்.