
|
கண்ணிற் பட்டதும் கருத்திற் பட்டதும்
1. "தமிழ் வந்துவிட்டால் சோறு வந்துவிடுமோ?" - வராது. ஆனால் தமிழர்க்கு மானம் வரும், அறிவு வரும், உரிமை வரும் - அது எல்லாத் தமிழர்க்கும் ஒருசேர வரும். -சிந்தனையாளன், சனவரி-2008, பக். 2 (தமிழ் ஆட்சிமொழியாக வந்துவிட்டால் தமிழ்க்கல்வி வரும். தமிழ்கல்வி வந்தால், தமிழ் படித்தவர்களுக்குத்தான் அரசுபணி வரும், அரசு பணி வந்தால் சோறும் வரும்; மானமும் வரும்; அறிவும் வரும்; உரிமையும் வரும் - இரா.தி.) 2. வினா - ஈழத் தமிழ்ச் செல்வன் கொல்லப்பட்டதற்கு முதலமைச்சர் இரங்கல் கவிதை எழுதியதை எதிர்த்தவர்களுக்கு என் உடம்பில் தமிழ்க் குருதி ஓடுவதால் அப்படிச் செய்தேன் என்று, கலைஞர் சொன்ன பதிலை நடுவணரசின் காங்கிரசு அமைச்சர் ஈ.வெ.கி.ச. இளங்கோவன் பலமாக எதிர்க்கிறாரே? - நா. பெருமாள் - வேலூர் 3. விடை - கன்னடத் தந்தைக்கும் தெலுங்குத் தாய்க்கும் பிறந்து தமிழ் நாட்டின் சார்பில் மத்தியில் அமைச்சராக இருக்கும் அவரைக் கலைஞரின் பதில் உறுத்தத்தானே செய்யும்? சித்தார்த்த சங்கர்ரேயின் வங்கக்குருதி வங்கதேசத்தைப் படைத்துக் கொடுத்ததும் இந்தியாவில் நிகழ்ந்துள்ளதே! -எழுகதிர். திசம்பர் 2007. பக், 30 (பேய்ச்சுரைக்காயை உப்பு, நெய், பால், தயிர், பெருங்காயம் முதலியன சேர்த்துச் சமைத்தாலும் கசப்பு மாறாது என்கிறது நாலடியார். - இரா.தி.) |