ஆண்டு : க௪
இதழ் : கக
தி. ஆ. உ0௩௯, கும்பம்,
13 - 02 - 2008
எம்மைப்பற்றி

நோக்கம் :
இயற்றமிழ், இசைத்தமிழ்ப்பாதுகாப்பும் வளர்ச்சியும்.

வினைப்பாடுகள் :
1. கெடல் எங்கே தமிழின் நலன் அங்கெல்லாம் தலையிட்டுக் கிளர்ச்சி செய்தல்
2. தமிழை ஆட்சி மொழியாகவும், கல்விமொழியாகவும் வளர்த்தல்

வரலாறு :
புதுவைத் தமிழன்பர்கள் தமிழ்ப்பணி அறக்கட்டளையின் சார்பில் 14.4.1993 இல் 'நல்லதமிழ்' என்ற பெயரில்,
முனைவர் இரா. திருமுருகனாரைச் சிறப்பாசிரியராகவும்,
புலவர் மு. இறைவிழியனாரை ஆசிரியராகவும்
கொண்ட திங்களிதழாகத் தொடங்கப்பட்டது.
முதலிதழின் பக்கம்: 16, விலை : 1 உருபா. 14.4.1994 முதல் அரசு ஏற்பின்படித் 'தெளி தமிழ்' என்ற பெயர் மாற்றத்துடன் வெளிவந்துகொண்டிருக்கிறது.

ஆசிரியர் :
முனைவர் இரா. திருமுருகன்,

துணையாசிரியர் :
பேராசிரியர் ம. இலெ. தங்கப்பா,

உதவி ஆசிரியர் :
பைந்தமிழ்ப் பாவலர் இரா. இளமுருகன்.