
|
நூல் அறிமுகம்
மொழிப்போர் ஒரு வரலாறு: ஆசிரியர்: பாவலர் சாவல்பூண்டி மா. சுந்தரேசன், வெளியீடு: சத்யா பதிப்பகம், 752, குன்றக்குடி அடிகளார் நகர், திருவண்ணாமலை-606 601. பக்கங்கள்: 20+ விலை குறிப்பிடவில்லை. தமிழைக் காக்கும்பொருட்டு மொழிப்போர்களில் வீறுகாட்டிய தமிழ் மறவர் குறித்த வயணங்களைத் தரும் நூல். ஒவ்வோராண்டும் சனவரி 25ஆம் நாளன்று மொழிப்போர் மறவர்களையும் ஈகியரையும் நன்றியுடன் நினைவு கூர்ந்து வீறு வணக்கம் செய்வதேன் என்பதற்குக் காலவரலாற்றுப் பின்னணியில் காரணங்களை அடுக்கும் நூல். 1938ஆம் ஆண்டும் 1965 ஆண்டும் நிகழ்த்தப்பட்ட மொழிப்போர்கள், அவற்றுக் கிடையில் மொழிப்போருக்காகத் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா முதலான பெருந் தலைவர்கள் மறவர்களை உருவாக்கியவகை ஆகியவை செறிவாக இந்தச் சிறுநூலில் உரைக்கப் பட்டுள்ளன. மொழிப்போர் குறித்து அறிய விழைவோர், முதலில் இந்த நூலைப் படிக்கவேண்டும். |