தமிழ் வளர்க்கும் தாளாண்மைகள்

நாளிதழ் நடவடிக்கைகள்: ஏற்கெனவே அறக்கட்டளைக்கு வந்த நன்கொடைத் தொகை மொத்தம்

 உரூ.
2,29,933
சென்ற திங்கள் வந்த நன்கொடை:
திரு வேணு. ஞானமூர்த்தி 
1000
திரு. பொ. இராமராசு, கோவை 
50
ஆக மொத்தம்  
2,30,983

அன்புகூர்ந்து நன்கொடைகளைத் தமிழ்வளர்ச்சி அறக்கட்டளை என்ற பெயருக்குப் பணவிடையாகவோ. கேட்புக்காசோலையாகவோ, திரு தி. ப. சாந்தசீலன், பொருளர், 22, உடையார் தெரு, பாக்கமுடையான்பட்டு, புதுச்சேரி -605008 என்ற முகவரிக்கு அனுப்புக.

தமிழும் கிரந்தமும்: தமிழ் நெடுங்கணக்கில் கிரந்த எழுத்து வடிவங் களை இணைக்க வேண்டுமெனச் சமற்கிருதப் பற்றாளர் தமிழர் சிலர் மலேசியத் தமிழ் நாளிதழ்களில் வெளியிட்டியிருந்தனர். திரு வி.சு. சியார்சு என்பவர் மறைமன்றத்தின் ஏடான இரெலவன் சூலை 2007 ஏட்டில், தமிழ்ப் பள்ளிகள் மூடப்படுவதைத் தான் காண விரும்புவதாகக் கூறிய முட்டாள் தனமான செய்தியைக் கண்டிக்கும் வகையில், மலேசியாவின் முப்பேரமைப்புகளான தமிழ் இலக்கியக்கழகம், திராவிடர் கழகம், தமிழ் நெறிக்கழகம் ஆகியன இணைந்து மாபெரும் கூட்டத்தைக் கன்னி 15 (30.9.2007)அன்று நடத்தின. அதில், உலக முதன் மொழி சமற்கிருதமா? கிரந்த எழுத்துகள் தேவைதானா? தமிழ் நெடுங்கணக்கில் கிரந்தம் உள்ளடக்கமா? என்ற மூன்று தலைப்புகளில் பேசப்பட்டன.

ச. முத்துக்குமரன் குழுவினர் அளித்த அறிக்கைக்கு வரவேற்பு: தமிழகத்தில் 5 வகையான பாடத்திட்ட முறைகள் உள்ளன. அரசுபள்ளி, தனியார்பள்ளி எனும் வேறுபாடுகளை நீக்கி ஒரே பாடத்திட்டம் கொண்ட தரமான சமச்சீர்க் கல்வியை நடைமுறைப்படுத்தவேண்டும், பன்னாட்டு நடை முறைப்படியும் தேசிய அளவில் அமைக்கப்பட்ட கல்விக்குழுவின் பரிந்துரைப் படியும் பள்ளிக்கல்வி முழுமையும் (1 முதல் 12 முடிய) தமிழ் வழியாகவே கற்பிக்கப்பட வேண்டும். தமிழ் வழியில் படித்த பலர் இ.ஆ.ப. தேர்வில் சிறப்பான முறையில் வெற்றிபெற்றுள்ளனர். பிரான்சு, செர்மனி, சப்பான், கியூபா, வியட்நாம் போன்ற நாட்டு மக்கள் தங்கள் தாய்மொழியிலேயே அனைத்து உயர்கல்வி யையும் பெறுகின்றனர். நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள் பலருக்கு ஆங்கிலமே தெரியாது. தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய இராசராசனோ, காவிரியில் கல்லணை கட்டிய கரிகால் மன்னனோ, ஆங்கிலம் அறிந்தவ ரில்லை. குண்டு மழைக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஈழத்தமிழர்கள் கூட மருத்துவம், பொறியியல் முதலான உயர் கல்வியைத் தமிழிலேயே கற்று உலக முழுவதும் பணியில் உள்ளனர். எனவே தமிழக அரசே, பள்ளிக் கல்வியில், பல்கலைக் கல்வியில் விரைந்து தமிழைக் கல்விமொழியாக்கு! என்று பாவேந்தர் இலக்கியப் பேரவையின் தலைவர் புலவர் ப. சுப்பண்ணன் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

திருவள்ளுவர் திருச்சபை அறக்கட்டளை: இவ்வாண்டுத் திருவள்ளுவர் பெருவிழாவை வரும் 2039 தை 6ஆம் நாள் (2008 சனவரி 20) நடத்தி, மாநாட்டில் திருவள்ளுவம் சிறப்பு மலர் வெளியிடத் தீர்மானித்துள்ளது. கட்டுரை, கவிதை ஒன்று படைத்துப் பின்வரும் முகவரிக்கு வரும் 10-12-2007க்குள் அனுப்பி வைக்குமாறு வேண்டுகிறது. தொடர்புக்கு 62, மேல்தளம், பழைய பாரத வங்கிக் குடியிருப்புச் சாலை, வடக்கு சற்குண வீதி, நாகர் கோவில்-629 001. அலைபேசி 93602 45983, தொலைபேசி 04652-295793.