பிழை |
சரி |
| பாலாறுக்குப் பதில் பொன்னையாற்றில் |
பாலாற்றுக்குப் பதில் பொன்னையாற்றில் |
| வலுவற்றதாக இருக்கின்றன |
வலுவற்றனவாக இருக்கின்றன |
| உயிர்ப் பிழைத்த குழந்தை |
உயிர் பிழைத்த குழந்தை |
| பெரும் அளவில் |
பேரளவில் |
| அனைத்துக் கட்சிகள் கூடின |
அனைத்துக் கட்சிகளும் கூடின |
| தமிழர்த் தேசிய இயக்கம் |
தமிழர் தேசிய இயக்கம் |
| விடுதலைக் கிடைக்கவில்லை |
விடுதலை கிடைக்கவில்லை |
| சிலப் பகுதிகள் |
சில பகுதிகள் |
| குடியுரிமைக் கேட்டார் |
குடியுரிமை கேட்டார் |
| கட்சித் தொடங்கினார் |
கட்சி தொடங்கினார் |
| கை கோர்த்துச் சென்றனர் |
கை கோத்துச் சென்றனர் |
| உடற்தகுதி |
உடற்றகுதி |
| அத்து மீறியச் செயல் |
அத்து மீறிய செயல் |
| எல்லாச் செலவை ஏற்கவேண்டும் |
எல்லாச் செலவையும் ஏற்கவேண்டும் |
| வெள்ளிக்கிழமை காலை |
வெள்ளிக்கிழமைக் காலை |
| வெள்ளிக்கிழமைத் தொடங்கியது |
வெள்ளிக்கிழமை தொடங்கியது |
| நினைவுச் சின்னங்கள் பாதுகாக்கப்படுகிறது |
நினைவுச் சின்னங்கள் பாதுகாக்கப்படுகின்றன |
| மன்னுயிர் கல்வி |
மன்னுயிர்க் கல்வி |
| முன்பகைக் காரணமாக |
முன்பகை காரணமாக |
| பணிபெற பதிவு செய் |
பணிபெறப் பதிவு செய் |
| உடற்கூறு ஆய்வறிக்கை |
உடற்கூற்று ஆய்வறிக்கை |
| அணைக்கு பாதுகாப்பு |
அணைக்குப் பாதுகாப்பு |
| பெரும் வெற்றி | பெரு வெற்றி |
| மொழிப்பெயர்த்திடும் பணி | மொழிபெயர்த்திடும் பணி |
| நடை பயணம் | நடைப் பயணம் |
| வெளுத்ததெல்லாம் பால் அல்ல | வெளுத்ததெல்லாம் பால் அன்று |
| அதற்கு முன்னர் பதிவு செய் | அதற்கு முன்னர்ப் பதிவு செய் |
| சொத்து படைத்தவர் | சொத்துப் படைத்தவர் |
| அபூர்வ தீர்ப்பு | அபூர்வத் தீர்ப்பு |
| தொலைக்காட்சித் தொடங்க | தொலைக்காட்சி தொடங்க |