மணமக்கள் வாழ்க மகிழ்ந்து!

முனைவர் இரா. திருமுருகன் பெயர்த்தியும், புதுவை எழில்நகர்த் திருமிகு சு. அறவாழி-இரேணுகாஅறவாழி இணையரின் மகளுமாகிய அ. தென்றல், புதுவைத் தாகூர்நகர்த் திருமிகு விசயபாற்கரன்-புட்பராணி இணையரின் மகனாகிய விசயகார்த்திக் ஆகிய இருவருக்கும் 15-11-2007 அன்று புதுவை இராசராசேசுவரி திருமண மண்டபத்தில் திருமணம் நிகழ்ந்தது. முனைவர் இரா. திருமுருகன் திருமணக் கரணம் நடத்தினார்.

பேராசிரியர் ம. இலெ. தங்கப்பா-திருவாட்டி தடங்கண்ணிதங்கப்பா இணையர் வாழ்த்துரை வழங்கினர். இல்லறம் புக்க மணமக்கள் தெளிதமிழ் இதழ் வளர்ச்சிக்காக உரூ. 500 தமிழறம் செய்தனர்.

மலேசியாக் கோலாலும்பூரைச் சேர்ந்த செலாங்கூர்த் தமிழ்ப்புரவலர் திருமிகு ஆ. மாரியப்பன்-க. விசயலக்குமி(வெற்றிச்செல்வி) இணையரின் மகள் மா. சித்ரா, செலாங்கூர்த் திருமிகு இரா. முனிசாமி(செல்வம்)-மு. இலட்சுமி(பாப்பா) இணையரின் மகன் மு. மதன் ஆகிய இருவருக்கும் 21-11-2007 அன்று கிள்ளான் ஒக்கியான் மண்டபத்தில், தகைமிகு மா. அருள்முனைவனார் அவர்கள் தலைமையில், செந்தமிழந்தணர் மதுரை இரா. இளங்குமரனார் அவர்களின் வாழ்த்துரையுடன் சிறப்புற நடைபெற்றது.

சென்னைச் சூளைமேடு. தமிழறிஞர் இரா. மதிவாணன்-கோமதி மதிவாணன் இணையரின் மகள் ம. சோபனா, தாசக்கவுண்டன்புதூர்த் திருமிகு ஆ. செகநாதன்-சித்ராசெகநாதன் இணையரின் மகன் மரு. செ. சுனில் ஆகிய இருவருக்கும் 23-11-2007 அன்று வடபழனி சே. எசு. திருமண மண்டபத்தில் திருமணம் நிகழ்ந்தது.

இல்லறமேற்ற மணமக்கள் இவ்வுலக இன்பமெலாம் துய்த்து என்றும் இனிது வாழ்க! என்று தெளிதமிழ் வாழ்த்துகிறது.