துணுக்குகள்
தொலைக்காட்சியில் மட்டும்
சித்திரை தமிழ் புத்தாண்டுத் தொடக்கமா?

தைத்திங்கள் தான்தமிழர் தக்கபுத் தாண்டென்று
முத்திரை குத்திய மு. க. வே, - சித்திரையில்
"புத்தாண்டுக் காட்சி"யெனப் போய்ச்சேற்றில் வீழ்கின்றார்
பித்தரா? பேயரா? பேசு!
- புலவர். பெ. சயராமன், கள்ளக்குறிச்சி.




ஒகனேக்கலில் புகுந்த ஓநாய்கள் !
புலவர் பெ. சயராமன், கள்ளக்குறிச்சி

முத்தமிழ் நாற்றமிழ் ஐந்தமிழ் வல்லமை முற்றியவர்
எத்திசைச் சென்றனர்? என்னசெய் கின்றனர் இப்பொழுது?
கத்தியும் கம்பும் கயிறுமாய் வந்தனன் கன்னடியன்!
புத்தராய் நின்றிடில் போக்கிலி வெல்குவன் போரினிலே.

வந்தவன் தன்னை வளைத்துப் பிடித்தவன் வாயினிலே
வெந்தணல் இட்டால் வெருளுவன், அன்றேல், விரட்டிடுவன்!
'இந்தியா' 'இந்தியர்' என்றுரைத் தும்மைஏ மாற்றுகின்றார்
இந்தப் பொழுதினி லாகிலும் பார்மின் இமைதிறந்தே!

தம்முடைப் பேர்புகழ் தம்முடை மக்கள் தமித்துயர
எம்மவர் செய்யும் இழிசெயற் கெல்லை யிலையிலையே!
நம்மவர், நற்றமிழ் நாளும் நலமுற நல்லவழி
இம்மையிற் சொல்லி எழுச்சியை யூட்டுத லெப்பொழுதோ!




தெளிதமிழ் வளர்ச்சிக்கென வழங்கப்பட்ட நன்கொடைகள் :
1. புலவர் வி. திருவேங்கடம், செல்லான் நகர். 1000.00
2. பண்டித கு. அரங்கநாதன், வரிச்சுக்குடி. 500.00
3. கலைமாமணி, புலவர் அரங்க. நடராசன், புதுச்சேரி. 100.00