பிழை |
சரி |
| ருஷ்யாவில் |
உருசியாவில் |
| இறங்கல் உரை |
இரங்கல் உரை |
| பல்லாண்டு காலம் |
பல்லாண்டுக் காலம் |
| கிருஃச்ணமூர்த்தி |
கிருட்டினமூர்த்தி |
| இட ஒதுக்கீடு வழக்கு |
இட ஒதுக்கீட்டு வழக்கு |
| ஆதரவாக தமிழ்நாடு |
ஆதரவாகத் தமிழ்நாடு |
| நூறடி சாலை |
நூறடிச் சாலை |
| ஆட்சிகாலத்தில் |
ஆட்சிக்காலத்தில் |
| வாய்ப்பு கிட்டியது |
வாய்ப்புக்கிட்டியது |
| நடைபாதை |
நடைப்பாதை |
| புலிநிகர்ப் போட்டி மறவர் |
புலிநிகர் போட்டி மறவர் |
| அருவறுப்பு |
அருவருப்பு |
| பத்து கல் தொலைவு |
பத்துக்கல் தொலைவு |
| தமிழ்நாடு முதற்றாய் நிற்கும் |
தமிழ்நாடு முதலாய் நிற்கும் |
| அனைத்து கட்சிகள் கூடின |
அனைத்துக் கட்சிகளும் கூடின |
| யாழ் தமிழர் |
யாழ்த் தமிழர் |
| அவர் ஒரு பொருட்டன்று |
அவர் ஒரு பொருளல்லர் |
| புழக்கடை |
புழைக்கடை |
| மேற்தட்டு மக்கள் |
மேற்றட்டு மக்கள் |
| எங்கு போய் முடியும் |
எங்குப் போய் முடியும் |
| எம்பது/எம்ளது |
எண்பது |
| தூள்ப்பாக்கு |
தூட்பாக்கு |
| இது போன்றத் திட்டங்கள் | இவை போன்ற திட்டங்கள் |
| கிருஷ்ணா ஆறுநீர்த்திட்டம் | கிருட்டினா ஆற்றுநீர்த் திட்டம் |
| அதன் பின்னர்தான் வரும் | அதன் பின்னர்த்தான் வரும் |
| புடவை | புடைவை |
| முந்தானை | முன்தானை |
| அரண்மணைப் போன்ற வீடு | அரண்மனை போன்ற வீடு |
| புலமைப் பெற்றிருந்தார் | புலமை பெற்றிருந்தார் |
| தலைவராக செயல்பட்டார் | தலைவராகச் செயற்பட்டார் |